0
5

ஐபிஎல் தொடரில் ஐந்து முறை கோப்பை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ், கடந்த நான்கு வருடங்களில் மூன்றுமுறை கோப்பையைத் தன்வசப்படுத்தி, தமக்கு நிகர் தாங்கள்தான் என்பதை பறைசாற்றியுள்ளது. உண்மையில் மட்டும்தான் ஐபிஎல் வரலாற்றில் கில்லி அணியா? என்ற கேள்விக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா விடை கொடுக்கிறது.

முதலில், 13ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடுகள் குறித்துப் பார்ப்போம். வேகப்பந்து வீச்சாளர்கள் பவர் பிளேவில் 19.82 சராசரியுடன் 28 விக்கெட்களை கைப்பற்றினர். 16.9 பந்துகளுக்கு ஒருமுறை விக்கெட்களை எடுக்கும் இவர்கள், டெத் ஓவர்களில் சராசரியாக 9 ரன்களுக்கு குறைவாக விட்டுக்கொடுத்து அசத்தியுள்ளனர். மும்பை இந்தியன்ஸின் வெற்றி நடைக்கு இது முதன்மை காரணமாக உள்ளது.

ஐபிஎல் 13ஆவது சீசனின் வெற்றி சராசரி கணக்கில் மும்பை இந்தியன்ஸ் 68.75 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. அடுத்த நிலையில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் 52.94 புள்ளிகள் பெற்றிருக்கிறது. மற்ற அணிகள் 50, 46 எனப் புள்ளிகளைச் சேர்த்துள்ளது. இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் தனிக்காட்டு ராஜாவாக இருந்தது தெரிகிறது.

ஐபிஎல் தொடரில் இந்த வருடம்தான் ஒரு அணி அதிக நெட் ரன்ரேட் விகிதம் பெற்று கோப்பையை தட்டிச் சென்றுள்ளது. இதுவரை எந்த அணியும் 1.00 நெட் ரன்ரேட் விகிதத்தைக் கடந்து கோப்பை வென்றதில்லை. ஆனால், மும்பை இந்தியன்ஸ் 1.37 நெட் ரன்ரேட் விகிதத்துடன் கோப்பையைத் தட்டிச் சென்று தனது வலிமையை நிரூபித்துள்ளது.

2017 முதல் 2020 வரை மும்பை இந்தியன்ஸ் மூன்றுமுறை கோப்பை வென்று அசத்தியுள்ளது. வேறு எந்த அணியும் இந்த சாதனையைப் படைத்ததில்லை. ஆனால், நான்கு வருடங்களில் இரண்டுமுறை கோப்பை வென்ற பட்டியலில் (2010-2013, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2011-2014) அணிகள் உள்ளது. இந்த மூன்று அணிகளில் யார் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தினர் என்பது குறித்துப் பார்ப்போம்.

மும்பை இந்தியன்ஸ் (2017-2020): மும்பை இந்தியன்ஸ் 13ஆவது சீசனில் அதிக வெற்றி விகிதத்துடன் கோப்பை வென்ற அணியாக உள்ளது. ஆனால், பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்டில் கொல்கத்தா அணியை விடவும், பௌலிங் எகனாமி ரேட்டில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை விடவும் பின்தங்கிய நிலையில் இருந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (2010-2013): இந்த காலகட்டத்தில் சிஎஸ்கேவை விட மும்பை இந்தியன்ஸ் அதிக வெற்றிகளை குவித்தது. 2010-2013 வரை இரு அணிகளும் நான்குமுறை பிளே ஆஃப் சுற்றில் மோதி, அதில் சிஎஸ்கே மூன்றில் வெற்றி பெற்று அசத்தியது. 2010 இறுதிப் போட்டி, 2012 எலிமினேஷன் சுற்று, 2013 முதல் பிளே ஆஃப் சுற்று ஆகியவற்றில் மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே தனது பலத்தை வெளிப்படுத்தியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2011-2014): ஐபிஎல் தொடர் ஆரம்பித்தது முதல் மூன்று வருடங்களில் கொல்கத்தா அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. ஆனால், 2011-2014 வரை மூன்றுமுறை பிளே ஆஃப் முன்னேறி இரண்டுமுறை கோப்பை வென்றது. இந்த காலகட்டத்தில் மும்பை, சென்னை அணியை விடக் குறைவான வெற்றி விகிதங்களைக் கொண்டிருந்தது. கொல்கத்தாவின் சொந்த மைதானமான ஈடன் கார்டனில் சுழற்பந்துக்குச் சாதகமான நிலை இருந்ததால், , சஹிப் அல் ஹசன், ராஜட் பாட்டியா போன்றவர்கள் உதவியுடன் இந்த காலகட்டத்தில் சிறப்பாக ஜொலித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி மற்ற சீசன்களை விட இந்த வருடம் சிறப்பாக சோபித்தது எனவும், உலகில் உள்ள மற்ற டி20 அணிகளை மும்பை வீழ்த்தும் திறனுடன் உள்ளது எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here