தஞ்சை 5 பேர் பலி: யார் மீது தவறு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர்

0
5
கொரோனா தடுப்பூசி போடுவதை குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, தமிழக மின்சாரம், ஆயத்தீர்வைத்துறை மற்றும் மதுவிலக்கு கலந்துகொண்டு சிறப்பு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், ” கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பாக சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்ட முடிவின்படி, தடுப்பூசி பணிகள் படிப்படியாக செயல்படுத்தப்படும். தஞ்சாவூரில் தனியார் பஸ் மின்கம்பியில் உரசியதில் 4 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது.

அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. மழை பெய்ததால் மணல் திட்டு மீது பஸ் ஏறி இறங்கியபோது, கம்பி உரசியதில் பயந்து வெளியே குதித்ததால் உயிர் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. மின்சார வாரியம் மீது தவறு இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியவர், பாமக நிறுவனர் சந்தித்ததன் காரணம் குறித்து அவர் ஏற்கனவே விளக்கிவிட்டார். கூட்டணி குறித்து அவர் எதுவும் பேசவில்லை” என இவ்வாறு அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here