ஒவ்வொருவருக்கும் கோபம் வரணும்; ஆக்ரோஷமாக அருண் விஜய்!!

0
4
கோலிவுட்டில் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் . நடிகர் விஜயகுமாரின் மகன் என்பதால் மட்டுமல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தன்னுடைய மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்துவதால் ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க போன்ற பல படங்களில் நடித்துள்ள அருண் விஜய்க்கு கோலிவுட்டில் ரீ-எண்ட்ரீ கொடுத்த படமாக அமைந்தது தல அஜித்தின் ’என்னை அறிந்தால்; என்பது அனைவரும் அறிந்ததே.

திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு எதிர்மறையாக வில்லன் கேரக்டரை செய்த போதும், அருண் விஜய் தனது அட்டகாசமான நடிப்பால் கோலிவுட் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். குறிப்பாக தல ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டார்.

’குற்றம் 23’ படத்தைத் தொடர்ந்து அருண் விஜய் மீண்டும் காக்கி சட்டையில் படத்தில் களமிறங்குகிறார். நவம்பர் மாதம் ’சினம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கியுள்ளார்.

இவர் 2009ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படமான ’நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. நடிகர் வைபவ்வின் ’’ படத்தில் இணைந்து நடித்துள்ள பலக் லல்வாணி, இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அருண் விஜய்யோடு ஜோடி சேர்ந்துள்ளார்.

மேலும் காளி வெங்கட், ஆர்.என்.ஆர் மனோகர் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது சினம் படத்தின் டீஸர் வெளிவந்துள்ளது. வெறும் 46 நொடிகளில் டீஸர் முடிந்துவிட்டாலும், சபிர் இசையமைப்பில் அருண் விஜய்யின் அட்டகாசமான வாய்ஸ் ஓவரில் டீஸர் பட்டையை கிளப்புகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here