மேலும் தென்கொரியாவில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் 2004ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிய திரைப்படம் என்ற விருதைப் பெற்றது. திரைப்படம் ரிலீசான பிறகு வசூல் ரீதியாக நல்ல வெற்றி பெற்றாலும், சாதி அரசியல், மரண தண்டனை போன்ற விவாதப் பொருட்களால் நிறைய விமர்சனங்களை சந்தித்தது.

படத்திற்கு முதலில் ’’ என பெயர் வைத்து விளம்பரம் செய்து வந்தனர். சாதியின் பெயரால் படம் எடுக்கப்படுகிறது என்று படத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானதால் பின்பு ’விருமாண்டி’ என்று கதாநாயகனின் பெயரையே படத்திற்கு வைத்தனர்.
17 வருடங்கள் கழித்து வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி விருமாண்டி திரைப்படத்தை -ல் ரீ-ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். இதனையொட்டி தற்போது ராஜ் கமல் ஃபில்ம்ஸ் பேனரில் படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

ரசிகர்களின் மத்தியில் படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று, 8 லட்சம் பார்வையாளர்களை கடந்து யூ-டியூப் ட்ரெண்டிங்கில் 5வது இடத்தில் உள்ளது. ரசிகர்களின் ஆதரவால் 17 வருடங்கள் கழித்தும் புதுப்படங்களுக்கு கொடுக்கும் வரவேற்பை ’விருமாண்டி’ திரைப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.