இந்த படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சந்தானம் திக்குவாய் கேரக்டரில் நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடி படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் வருகிற ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து சந்தானம் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘பாரிஸ் ஜெயராஜ்’. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஜனவரி 19ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
அதில்‘பாரிஸ் ஜெயராஜ்’ என்ற டைட்டிலுடன் கையில் மைக்கை பிடித்து ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார் சந்தானம். அதைப்பார்க்கும் போது அவர் இந்தப் படத்தில் கானா பாடகராக நடித்திருப்பதாக தெரிகிறது. பாரிஸ் ஜெயராஜ் படத்தில், சந்தானத்துக்கு நாயகிகளாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரா நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன்,, எடிட்டராக பிரகாஷ் பாபு, சண்டை இயக்குநராக ஹரி தினேஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். மேலும் இப்படம் இந்த ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் “டிக்கிலோனா”. இயக்குநர் தயாரிக்கும் இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதில் யோகி பாபு, அனகா, ஷிரின் ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷா ரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, இட் ஈஸ் பிரசாந்த் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகவுள்ளார்.
படப்பிடிப்பு அனைத்துமே முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது, ‘டிக்கிலோனா’ படக்குழு. இத்தோடு ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகம் ‘கொரோனா குமார்’. இந்த படத்தில் ஹீரோவாக நடிக்ககிறார் சந்தானம். மேலும் இப்படத்தில் சுமார் மூஞ்சி குமாராக சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் எனவும் தெரிகிறது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.