‘வலிமை’ அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா: அஜித் ரசிகர்கள் முருகனிடம் வேண்டுகோள்!

0
3
இயக்குநர் எச்.வினோத், இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘வலிமை’. இதில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து இயக்குநர் எச்.வினோத், அஜித் கூட்டணி 2ஆவது முறையாக படத்தில் இணைந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில், நடிகர் அதர்வா நடித்த ‘நூறு’ படத்தின் வில்லன், ராஜ் அய்யப்பன் அஜித்தின் தம்பியாக நடிக்கிறார். மேலும், ‘வடசென்னை பாவெல் நவகீதன், காமெடிக்கு யோகிபாபு, புகழ் என பலரும் நடித்து இருக்கிறார்கள்.’தீரன்’ படத்தில் இந்தி, மராத்தி நடிகர்களை அறிமுகப்படுத்தியது போல, இதிலும் பல மாநில நடிகர்களை பயன் படுத்தியிருக்கிறார் இயக்குநர் எச். வினோத்.

மேலும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, நேர்கொண்ட பார்வை டெக்னீஷியன் டீமே இப்படத்திலும் பணியாற்றி உள்ளார்கள். இப்படத்தில் தாயின் அன்பை உணர்த்தும் பாடல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் யுவன். இது தவிர படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு கடந்த ஒரு வருடங்களாக சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

‘படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் முடிந்தவுடன் தான் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்’ ஆகும் என்றும் பின்னர் ரசிகர்களை தொடர்ந்து குஷிப்படுத்தும் விதமாக அடுத்தடுத்து அப்டேட்டுகள் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் வரை வெளிவந்து கொண்டிருக்கும் என்ற தகவல்கள் வெளியாகி இருந்தது.

தற்போது, ஹைதராபாத், ராஜஸ்தானில் படப்பிடிப்பை முடித்த படக்குழு தற்போது சண்டைக் காட்சிக்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இம்மாத இறுதிக்குள் படத்தை முடித்து அஜித்தின் 50ஆவது பிறந்தநாளான மே 1ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதையடுத்து, நேற்று அஜித் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அஜித்தின் பிறந்தநாளிற்க்கு இன்னும் 100 நாட்களே உள்ளதாகவும், கவுண்டன் ஸ்டார்ட் என்றும், பதிவிட்டு, போஸ்டர்களை ஒட்டி, அதை ஷேர் செய்து வந்தார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில, படத்தின் அப்டேட்டிற்க்காக வெறித்தனமாக வெயிட் செய்து வந்த ரசிகர்கள், வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒன்ரை தயாரித்து உள்ளார்கள். அதில், முருகனின் படமும், அஜித்தின் புகைப்படமும் இடம் பெற , ” வலிமைக்கு அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா” என்ற வசனங்களும் இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டருடன் அஜித் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து, சமூக வலைதங்களில் பதிவிட்டு உள்ளார்கள். இந்த பதிவி தற்போது வைரலாகி, #valimai என்ற ஹேஷ்டேகுகள் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here