ஆண் நண்பரின் மொட்டையில் முத்தம்.. வைரலாகும் அமலா பால் புகைப்படம்

0
4
Amala Paul
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது எதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு எப்போதும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அவர் வேட்டி சட்டையில் வெளியிட்டு இருந்த புகைப்படம் வைரலாகி இருந்தது. அதில் அவர் தனது நண்பர்கள் உடன் நின்று போஸ் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று மற்றொரு ஆண் நண்பரின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவர் வெளியிட்டு உள்ளார். அதில் அவரது மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படம் ஒன்றும் உள்ளது. “I found myself a spot in the wild things tribe” என அது பற்றி குறிப்பிட்டுள்ளார் அமலா பால். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

மேலும் அமலா பால் வெளியிட்டுள்ள வீடியோவில் அவரது மொட்டை தலையில் கேக்கை எடுத்து பூசி விளையாடி உள்ளனர்.

A post shared by (@amalapaul) on Jun 10, 2020 at 5:04am PDT

நேற்று முன்தினம் அமலா பால் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டு ஆன்மா, பரவசம், ஏலியன் என ஒரு ஆன்மீக கருத்தை தெரிவித்து இருந்தார். அது புரியவே இல்லை என்று கூட சிலர் கமெண்ட் செய்து இருந்தனர்.

“நீ ராவான, அரிய மற்றும் கடுமையானவர். அதனால் உங்களை பெறும் ஐடியா பலருக்கும் பிடித்திருக்கும். ஆனால் உங்களிடம் இருக்கும் பரவசத்தை உணர வேண்டும் என்றால் அவர்கள் தங்களுக்குள் இருக்கும் பரவசத்தை முதலில் உணர வேண்டும். இல்லை என்றால் உங்களது ஆன்மா அவர்களுக்கு ஏலியனாக இருக்கும், ஏனென்றால் பெரும்பாலானவர்கள் அவர்களுக்கு பரிட்சயப்பட்ட மற்றும் தெரிந்த ஒருவரை தான் விரும்புவார்கள். அங்கு தான் அவர்கள் காதலில் ஒரு வாய்ப்பை தவற விடுகிறார்கள்” என அமலா பால் கூறி இருந்தார்.

அமலா பால் 2014ல் பிரபல இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்டார், ஆனால் சில வருடத்திலேயே அவர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடைபெறு சமீபத்தில் குழந்தையும் பிறந்தது.

அமலா பாலும் தற்போது ஒருவரை காதலித்து வருகிறார். ஆனால் இன்னும் திருமணம் பற்றிய எந்த முடிவையும் எடுக்கவில்லை. இரண்டாவது திருமணம் நடைபெற்றதாக சில மாதங்கள் முன்பு புகைப்படங்கள் சில பரவினாலும், அது போட்டோஷூட் ஏன விளக்கம் அளித்தனர்.

அமலா பால் நடிப்பில் கடைசியாக ஆடை படம் தான் ரிலீஸ் ஆகி இருந்தது. அடுத்து தன் கைவசம் படங்கள் வைத்திருக்கிறார் அவர். அதோ அந்த பறவை போல என்ற படத்தில் அவர் நடித்து முடித்துவிட்டார். அதன் ஷூட்டிங் பெரும்பாலும் காட்டு பகுதிகளில் தான் நடைபெற்றது. அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.

இது மட்டுமின்றி ஆடு ஜீவிதம், கேடவர், லஸ்ட் ஸ்டோரீஸ் ஆகிய படங்களிலும் அமலா பால் கவனம் செலுத்தி வருகிறார். நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் லஸ்ட் ஸ்டோரீஸ் தெலுங்கு ரீமேக்கில் அம்மாள் பால் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.

சமந்தாவின் ஓ பேபி படத்தினை இயக்கிய நந்தினி ரெட்டி தான் இந்த பத்தியும் இயக்குகிறார். லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற பெயரை மட்டுமே தெலுங்கில் பயன்படுகின்றனர், ஆனால் ஹிந்தியில் இருந்த 4 கதைகளுக்கு பதிலாக நான்கு புதிய கதைகளை தெலுங்கில் எடுக்கவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here