நார்மல் பட்டரை விட நட்ஸ்ல இருந்து தயாரிக்கிற பட்டர் ஏன் சிறந்தது?… பீநட் பட்டர் எவ்வளவு நல்லது?

0
12

பொதுவாக வேர்க்கடலை நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பதற்கு மத்தியில் நிறைய பேருக்கு இதனால் உணவு அழற்சியும் ஏற்படுகிறது என்ற எண்ணம் நிலவி வருகிறது. இந்த உணவு ஒவ்வாமை 5% முதல் 10% மக்களை பாதிக்கிறது. வேர்க்கடலை, பருப்பு வகைகள், பீன்ஸ் மற்றும் மரக் கொட்டைகள், பெக்கன்ஸ் மற்றும் பாதாம் போன்றவை பொதுவான தூண்டுதல்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

​நட்ஸ் பட்டர்

உங்களுக்கு கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டால் வீக்கம், வயிற்று போக்கு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இது உங்க தொண்டையை வீக்கமடைய வைக்க வாய்ப்பு உள்ளது. இது சுவாசிப்பதை கடினமாக்கி விடும். இது அனாபிலாக்டிக் அதிர்ச்சி எனப்படும் ஆபத்தான நிலையை உருவாக்குகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த கொட்டையில் இருந்து பெறப்படும் பட்டர் நமக்கு ஏராளமான நன்மைகளை தருகிறது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். எனவே உங்களுக்கு நட்ஸ் அழற்சி இல்லையென்றால் இந்த நட் பட்டரை நீங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ள முடியும். சரி வாங்க இதன் நன்மைகளை பற்றி நாம் இப்பொழுது பார்ப்போம்.

​எடை கட்டுப்பாடு

நட்ஸ் வகைகளில் ஏராளமான கொழுப்புகள் உள்ளன. இருப்பினும் இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் புரதம் ஆகியவை உள்ளன. இவை உங்களை முழு ஆற்றலுடன் உணர வைக்கும். இது குறைந்த கலோரியை உங்களுக்கு தருவதால் எடையை இழக்க உதவுகிறது. எனவே நட் பட்டர் உங்க எடை இழப்புக்கு உதவி செய்யும்.

​நல்ல கொழுப்பு

இதில் பெரும்பாலான கொழுப்புகள் நிறைவுறாத கொழுப்புகள் உள்ளன. இறைச்சியில் காணப்படும் டிரான்ஸ் கொழுப்பை விட இது நல்லது. இது உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இன்சுலின் ஹார்மோன் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

​ஊட்டச்சத்துக்கள் அடங்கிய ஆதாரம்

இந்த நட் பட்டர் உங்களுக்கு ஆரோக்கியமான கொழுப்புகளை மட்டுமல்ல புரதம், நார்ச்சத்துக்கள் போன்றவற்றையும் வழங்குகிறது. இதன் கொட்டைகளில் வைட்டமின்கள் ஈ மற்றும் பி 6, ஃபோலிக் அமிலம், நியாசின், மெக்னீசியம், துத்தநாகம், தாமிரம், பொட்டாசியம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. எனவே இந்த நட் பட்டரை வாங்கும் போது உப்பு, சர்க்கரை சேர்க்காத ஒன்றை பார்த்து வாங்குங்கள்.

​ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளன

இந்த நட் வகைகளில் செலினியம், மாங்கனீஸ், விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ போன்ற கனிமங்களும், ஃபிளாவனாய்டுகள், பினோல்கள், பாலிபினால்கள் மற்றும் பிற பொருட்கள் அடங்கியுள்ளன. நட் பட்டர் சாப்பிடுபவர்கள் ஆரோக்கியமான இதயத்தை கொண்டிருப்பர். இது பெருங்குடல் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும்.

​கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கிறது

இரத்த குழாய்களில் அதிகப்படியான கொழுப்பு இருப்பது உங்க தமனிகளை கடினமாக்கி பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் பிற மரக் கொட்டைகள் இதயத்திற்கு நல்லது. இது உங்க கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

​டைப் 2 டயாபெட்டீஸ் வராமல் தடுக்கிறது

-2-

இரத்தத்தில் அதிகளவு சர்க்கரை மற்றும் கொழுப்புகள் சேர்வது டைப் 2 டயாபெட்டீஸ்யை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இது நீரிழிவு நோயுடன் இணைந்து இதய பிரச்சினைகளை உண்டாக்கும். ஆனால் நீங்கள் நட் பட்டர் சாப்பிட்டு வந்தால் டைப் 2 நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும்.

​இதய நோய்கள் வராமல் தடுக்கிறது

இரத்த நாளங்கள் தடினமாகி பெருந்தமனி தடிப்பு நோய் போன்ற இதய நோய்கள் ஏற்படுகின்றன. இது உங்க இதயத்தை பலவீனப்படுத்தி இதய செயலிழப்புக்கு வழி வகுக்கும். இது பக்கவாதம், மாரடைப்பு அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளையும் ஏற்படுத்தும். சுமார் 28 கிராம் அல்லது 2 தேக்கரண்டி என வாரத்திற்கு இரண்டு முறை நட் பட்டரை சாப்பிட்டு வரலாம்.

​மக்னீசியம் உள்ள உணவு

நட் பட்டரில் அதிகளவு மக்னீசியம் காணப்படுகிறது. இது உங்கள் நரம்புகள், தசைகள், எலும்புகள், இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் உங்கள் மரபணு ஆரோக்கியம் அல்லது டி.என்.ஏ போன்றவற்றிற்கு உதவுகிறது. எனவே நீங்கள் ஆரோக்கியமாக வாழ முந்திரி, பாதாம், வேர்க்கடலை போன்ற கொட்டைகளை எடுத்துக் கொள்ளலாம்.

​பாதாம் பட்டர்

பாதாம் பட்டரில் பயோட்டின் எனப்படும் விட்டமின் பி7 காணப்படுகிறது. இது கொழுப்பு, சர்க்கரை மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. இது உங்க இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும், சருமத்தை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது.

​பிரேசில் நட் பட்டர்

பிரேசில் நட்டில் செலினியம் நிறைய அளவு காணப்படுகிறது. இது நம் தைராய்டு சுரப்பி சீராக இயங்க அவசியம். இது ஆரோக்கியமான மரபணுவை உருவாக்க உதவுகிறது. இது உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ப்ரீ ரேடிக்கல் எனப்படும் செல்கள் அழிக்கப்படுவதில் இருந்து காக்கிறது. இதன் மூலம் செல்களை பாதுகாக்கிறது. செலினியம் குறைவாக உள்ளவர்களுக்கு புற்றுநோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே இந்த தட் பட்டரை எடுத்து வருவது உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும்.

​முந்திரி பட்டர்

இது நட்ஸ் வகை கிடையாது. இது ஒரு வகை ஆப்பிளின் விதை. இந்த பழம் பிரேசிலின் கடலோரப் பகுதிகளில் காணப்படுகிறது. இது உடலுக்கு திசுக்களையும், இரத்தத்தையும் உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. உங்க செல்களை செல் சேதத்தில் இருந்து பாதுகாக்கும்.நிறைய ஆக்ஸினேற்ற பண்புகளைக் கொண்டு உள்ளது

​வால்நட் பட்டர்

வால்நட்டில் இதய ஆரோக்கியத்திற்கான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. இது ஆல்பா லினோலெனிக் அமிலம் எனப்படும் ஒருவகை அமிலமாகும். இது நல்ல கொழுப்பு அமிலமாகும். உடலுக்கு தேவையான அத்தியாவசியமான நன்மைகளை வழங்குகிறது.

​நட்ஸ் அச்சுக்களை தவிர்ப்பது எப்படி

நட்ஸ் வகைகளைக் கொண்டு பட்டர் தயாரிக்கும் போது அச்சு பயன்படுத்துவது உண்டு. இந்த அச்சுகளில் அஃப்லாடாக்சின் என்ற கெமிக்கல் உள்ளது. இது கல்லீரல் புற்று நோய்க்கு வழி வகுக்கும். நீங்கள் பட்டர் தயாரிக்கும் போது கொட்டைகளை குளிர்ந்த வறண்ட இடத்தில் சேமித்து எந்த வித அச்சும் இல்லாமல் உபயோகப்படுத்துங்கள். ப்ரீசரில் நட்ஸ் வகைகளை சேமித்து வைப்பது சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க உதவி செய்யும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here