நெல்லூர் இசை பள்ளிக்கு எஸ்.பி.பி. பெயர் வைக்கும் ஆந்திர அரசு

1
3
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஒரு மாத்திதற்கும் மேல் மருத்துவமனையில் இருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி மதியம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். தமிழக அரசு மரியாதையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உயிரோடு இல்லாவிட்டாலும் தன் பாடல்கள் மூலம் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இன்றும் பலரை இரவு நேரத்தில் தன் தேன் குரலால் தூங்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் நெல்லூரில் பிறந்து வளர்ந்தவர். இந்நிலையில் நெல்லூரில் இருக்கும் அரசு இசை மற்றும் நடனப் பள்ளியின் பெயரை டாக்டர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அரசு இசை மற்றும் நடனப் பள்ளி என்று பெயர் மாற்ற ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது என்று அம்மாநில அமைச்சர் கவுதம் ரெட்டி ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டை பார்த்த எஸ்.பி.பி.யின் மகன் சரண் ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அமைச்சரின் ட்வீட்டை பார்த்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

ரொம்ப நன்றி. இதை இசை ரசிகர்கள் என்றுமே மறக்க மாட்டோம். மேலும் நெல்லூர் சர்க்கிள் பெயரை எஸ்.பி.பி. சர்க்கிள் என்று மாற்றினால் நன்றாக இருக்கும்.

அருமையான முடிவு. நெல்லூரில் எஸ்.பி.பி. சிலை வைத்தால் மகிழ்ச்சி அடைவோம். ஆந்திர முதல்வருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளனர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here