ஐபோன் 11 வாங்க இதைவிட ஒரு சூப்பர் சான்ஸ் கிடைக்காது!

  0
  12

  ஹைலைட்ஸ்:

  • லேட்டஸ்ட் ஆப்பிள் ஐபோன்கள் மீது ஹோலி சலுகைகள்
  • ஐபோன் 11 ரூ.41,900 க்கு வாங்க கிடைக்கும்
  • ஐபோன் 12 மற்றும் 12 மினி மீதும் சலுகைகள்

  ஐபோன் 11 இந்தியாவில் தள்ளுபடியைப் பெற்றுள்ளது, இப்போது ஹோலி பண்டிகைககா ஒரு குறிப்பிட்ட கால சலுகையின் கீழ் இது ரூ.41,900 க்கு வாங்க கிடைக்கும்.

  இந்த சலுகையை ஆப்பிள் பிரீமியம் ரீசெல்லர் இமேஜின் வழங்கியுள்ளது, மேலும் இந்த சலுகை ஐபோன் 11 மாடலை ஆன்லைனில் மட்டுமின்றி, ஆஃப்லைனில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

  இந்த ஹோலி சலுகையின் கீழ் ரூ.5,000 கேஷ்பேக், அத்துடன் ரூ.8,000 மதிப்புள்ள ஆக்சஸெரீஸ் என மொத்தம் ரூ.13,000 சேமிப்பை ஒருவர் பெறலாம்.

  இந்த சில்லறை விற்பனையாளர் அதே ஹோலி சலுகையின் கீழ் ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 ஆகியவற்றிலும் தள்ளுபடியை வழங்குகிறது.

  வழக்கமாக ஐபோன் 11 மாடலானது எந்த தள்ளுபடியும் இல்லாமல் ரூ.54,900 முதல் வாங்க கிடைக்கும்.

  இமேஜினின் ஹோலி சலுகையின் கீழ் எச்.டி.எஃப்.சி வங்கி அட்டைகள் மற்றும் ஈஸிஇஎம்ஐ விருப்பங்கள் மூலம் கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5000 கேஷ்பேக் கிடைக்கும். மேலும் இந்தசில்லறை விற்பனையாளர் ரூ.8,000 மதிப்புள்ள ஆக்சஸெரீஸ், கூடுதல் எக்ஸ்சேன்ஜ் போனஸாக ரூ.3,000 போன்றவைகளை வழங்குகிறது.

  இதேப்லா ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 மாடல்கள் முறையே ரூ.48,900 மற்றும் ரூ.65,900 க்கு வாங்க கிடைகின்றன.

  வாடிக்கையாளர்கள் இமேஜின் வலைத்தளம் மற்றும் நாட்டில் உள்ள சில்லறை கடைகள் மூலம் இந்த ஹோலி சலுகையைப் பெறலாம். சலுகை எவ்வளவு காலம் இயங்கும் என்கிற தகவல் வெளியாகவில்லை. ஆனால் எச்.டி.எஃப்.சி கேஷ்பேக் மார்ச் 27 வரை மட்டுமே பொருந்தும்.

  செப்டம்பர் 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 11 அதன் விலை பிரிவில் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாகும். சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி நிறுவனமான ஓம்டியா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் ஐபோன் 11 அதிகம் ஷிப்பிங் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும், அதைத் தொடர்ந்து ஐபோன் எஸ்இ (2020) மாடல் உள்ளது.

  அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் 11 ஆனது 6.10 இன்ச் (828×1,792) பிக்சல்கள் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளே, ஆப்பிள் ஏ 13 பயோனிக் சிப்,டூயல் ரியர் கேமரா இரண்டும் 12 மெகாபிக்சல் சென்சார்கள் போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here