அட்லடிகோ மாட்ரிடுக்கு இன்னொரு ஸ்ட்ரைக்கர்: மான்செஸ்டர் யுனைடெடின் போசு மென்சா ஜெர்மனியில்!

0
5

பிரான்ஸ் நாட்டின் இளம் ஸ்ட்ரைக்கர்ரான இன்று ஸ்பெயின் நாட்டின் லா லிகவில் முதலிடம் வகிக்கும் அட்லடிகோ மாட்ரிட் அணியில் இணைந்துள்ளார். ஆனால் அட்லடிகோ அணியில் ஏற்கனவே பல உலக தரம் வாய்ந்த ஸ்டிக்கர்கள் இருப்பதால் இவருக்கு அதிகம் வாய்ப்பளிக்கப்படுவது சந்தேகமே. இவரை ஆறு மாதத்திற்கு மட்டுமே வாங்கியுள்ளனர், நன்றாக விளையாடும் பட்சத்தில் இவரை நிரந்தரமாக வாங்கக்கூடும். இவர் எளிதில் காயமடய கூடிய வீரர் எனினும் இவர் அணியின் முன்களத்தை பலப்படுத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை.

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் வலது பின்கள வீரரான போசு மென்சா ஜெர்மனி நாட்டின் லெவர்கூசெனுக்கு சென்றுள்ளார். மான்செஸ்டர் யுனைடெடின் வலது பின்களத்தில் வான் பிஸாக்கா இருக்கும் காரணத்தால் போசு மென்சாவிர்க்கு பெரிய அளவில் வாய்ப்பு அமையவில்லை, இதனால் வாய்ப்பை தேடி ஜெர்மன் நாட்டின் லெவர்கூசெனுக்கு சென்றுள்ளார்.


லெவர்கூசென் அணியின் வலது பின்கள வீரரான பெண்டர் இந்த சீசனுக்கு பின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், போசு மென்சா இந்த சீசனின் எஞ்சிய ஆட்டங்களை பெண்டருடன் விளையாடும் பட்சத்தில், அடுத்த ஆண்டு போசு மென்சாவிர்க்கு சற்று விளையாட எளிதாக அமையும் என்பதற்காகவே இப்பொழுது வாங்கியுள்ளனர்.

இதர பரிமாற்றங்கள்:

* லூக்கா யோவிச் ரியல் மாட்ரிட் அணியிலிருந்து மீண்டும் பிராங்க்ஃபர்ட் சென்றுள்ளார். ரியல் மாட்ரிட் அணியில் பெரிதும் சோபிக்கததே இதற்கு காரணம்.

* செபாஸ்டியன் ஹாலர் வெஸ்ட் ஹாம் அணியிலிருந்து அயாக்ஸ் சென்றுள்ளார். ஈஸ்ட் ஹாம் அணியில் பெரிய அளவில் இவருக்கு இடம் கிடைக்காதது இதற்கு காரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here