பார்சிலோனா அபார வெற்றி: முதல் இடத்திற்கான வேட்டை ஆரம்பம்!

0
0

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் போட்டியில் இன்று புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் அணியும், ஐந்தாம் இடத்தில் இருக்கும் சொசைடாட் அணியும் மோதின.

இவ்விரண்டு அணிகள் மோதிய முதல் ஆட்டத்தை பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. லீக் போட்டிகளில் பார்சிலோனா கடந்த 17 ஆட்டங்களாக தோல்வி அடையாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

சீசனின் துவக்கத்தில் மிக மோசமான நிலையில் இருந்த பார்சிலோனா தற்போது மீண்டும் முன்னணி அணிகளுக்கு அச்சத்தை கொடுத்து வருகிறது. சொசைடாட் அணி சீசனின் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இடைப்பட்ட காலங்களில் தொடர் தோல்வியின் காரணமாக தற்பொழுது புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் தவித்து வருகிறது. வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இரு அணிகளும் களம் இறங்கியது.

துவக்கத்தில் ஆட்டத்தை நிதானமாக தான் எடுத்துச் சென்றனர், சொசைடாட் அணி கடுமையான தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டது, மறுமுனையில் பார்சிலோனா அணி நிதானம் காட்டியது. வாய்ப்புக்காக காத்திருந்த பார்சிலோனா அணியின் மெஸ்ஸி, ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் அவருக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டார்.

மறுமுனையில் சொசைடாட் அணி சார்பாக ஆட்டத்தின் 24 ஆவது நிமிடத்தில் இசாக் கோலை நோக்கி அடிக்க அதை பார்சிலோனா அணியின் கோல்கீப்பர் டெர் ஸ்டெகன் சிறப்பாக செயல்பட்டு தடுத்துவிட்டார். ஆட்டத்தின் 37 ஆவது நிமிடத்தில் டெம்பெலே அடித்த பந்தை சொசைடாட் அணியின் கோல் கீப்பர் ரெமிரோ தடுக்க பந்து கிரீஸ்மன் கால்களுக்கு செல்ல அவர் அதை கோலாக மாற்றினார்.

தொடர்ந்து தாக்குதல் நடத்திய பார்சிலோனா அணியின் மெஸ்ஸி கொடுத்த அருமையான பாசை டெஸ்ட் கோலாக மாற்றி பார்சிலோனா அணியை 2 கோலி முன்னிலைபெறச் செய்தார். முதல் பாதி 2-0 என்ற கோல் கணக்கில் முடிவடைந்தது.

அட்டகாசமாக துவங்கிய பார்சிலோனா அணி ஆட்டத்தின் 53 ஆவது நிமிடத்தில் ஆல்பா கொடுத்த கிராஸ்சை சொசைடாட் அணியின் தடுப்பு ஆட்டக்காரர்கள் சிறப்பாக செயல்படாத காரணத்தால் பந்து டெஸ்ட் கால்களுக்கு செல்ல அவர் அதை கோலாக மாற்றி அணியை மூன்று கோல் முன்னிலை பெறச் செய்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டத்தின் 56வது நம்மிடத்தில் புஸ்க்கட்ஸ் கொடுத்த பாசை மெஸ்ஸி கோலாக மாற்றி அணியை 4 கோல் முன்னிலைபெறச் செய்தார். தொடர்ந்து தாக்குதல் நடத்திய பார்சிலோனா அணிக்கு ஆட்டத்தின் 66 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி கொடுத்த பாசை டெம்பெலே கோலாக மாற்றினார்.

ஆனால் ஆஃப் சைட் காரணமாக அந்த கோல் நிராகரிக்கப்பட்டது. அதே வேகத்தில் சென்று ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் மொரிபா கொடுத்த பாசை டெம்பெலே கோலாக மாற்றி பார்சிலோனா அணியின் ஐந்தாவது கோலை பதிவு செய்தார்.

பரநெட்சே ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில் சொசைடாட் அணிக்காக ஆறுதல் கோல் அடித்தார், இதற்கு பதிலடி கொடுத்த பார்சிலோனா அணி அட்டகாசமாக அவர்களுக்கு உரித்த ‘டிக்கி டாக்கா’ முறையில் சட சடவென ஒருவரை மாற்றி ஒருவர் பாஸ் செய்து இறுதியாக மெஸ்ஸி கோல் அடித்து 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறச் செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் ரியல் மாட்ரிட் அணியை பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடத்திற்கு பார்சிலோனா அணி முன்னேறியது. மேலும் முதல் இடத்தில் இருக்கும் அட்லடிகோ அணியை விட நான்கு புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here