நெஞ்சு வலிக்கான ஐந்து அறிகுறிகள் என்னென்ன? சாதாரண வலிக்கும் மாரடைப்புக்கும் என்ன வித்தியாசம்…

0
9

ஹார்ட் அட்டாக், உயிரிழப்பு போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. நிறைய பேருக்கு இதயம் கணப்பது போன்ற தோற்றம், இதயத்தில் அழுத்தம், இதயத்தில் தீவிர வலி போன்ற அறிகுறிகளும் தோன்றுகின்றன. இதற்கு ஏகப்பட்ட காரணங்கள் காரணமாகின்றன. நிறைய நேரங்களில் நம் மனதில் ஏற்பட்ட காயங்களால், மனநல பிரச்சனைகள், கவலைகள், பதற்றம் போன்ற காரணத்தினால் கூட இந்த மார்பு வலி ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். மார்பு வலியை எப்படி கண்டறியலாம் அதன் அறிகுறிகள் என்ன என்பதை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

​ஊசி குத்துவது போன்ற வலி

மார்பில் சுருக் சுருக்கென்று ஒரு கூர்மையான வலியை உணர்வீர்கள். முதலில் இப்படி வலி ஏற்படும் போது அதற்கான அறிகுறிகளை கவனிப்பது முக்கியம். ஏனெனில் பெரும்பாலான மார்பு வலி மாரடைப்புக்குக் காரணமாக அமைவதில்லை. ஏதேனும் கனமான பொருளை தூக்கும் போது, தீவிர உடற்பயிற்சி, மாதவிடாய் நாட்களில் போன்றவற்றின் போது மார்பில் வலி ஏற்படலாம். இதயம் கணத்தல் பொதுவாக மனநல பிரச்சனைகளால் மனத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதால் உண்டாகிறது.

​அதிக பயமும் படபடப்பும்

மார்பு வலி ஏற்படுகிற சமயத்தில் பதட்டமும் படபடப்புமும் தொற்றிக் கொள்ளும். சிலருக்கு பதட்டம் அதிகமாகும்பொழுது, உடல் முழுக்க வியர்க்க ஆரம்பித்து விடும். சில சமயங்களில் நமக்கு ஏற்படும் மிகுந்த பயமே மார்பில் வலி ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது. நாம் எச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது. அப்படி பயம் உண்டானால் கொஞ்சம் நேரம் ஓய்வெடுங்கள். மனதை அமைதியாக வைத்திருக்க முயலுங்கள். மூச்சுக் காற்றை உள்ளிழுத்து வெளிவிட்டு சிறிது ஆசுவாசப்படுத்துங்கள்.

​தலைசுற்றல், மயக்கம் மற்றும் வியர்வை

பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு மார்பு வலி ஏற்படும் போது அதிகப்படியாக வியர்வை உண்டாகும். சிலருக்குத் தலைசுற்றலும் மயங்கமும் கூட உண்டாகும். கைகளில் நடுக்கம், மூச்சு முட்டுதல், மூச்சு விடுவதில் சிரமம், அடிவயிற்றைப் பிரட்டுவது போன்ற உணர்வு, உடல் உணர்வில்லாமல் மரத்துப் போதல், சுருக் சுருக்கென்று வலி உடம்பில் ஏதோ ஒரு இடத்தில் குத்துவது போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

​விட்டு விட்டு வலி வரலாம்

சிலருக்கு தொடர்ச்சியாக வலி இல்லாமல் விட்டு விட்டு மார்பு வலி ஏற்படலாம். அது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். பின்னர் தானாகவே சரியாகிடும். அதிகபட்சம் 10 நிமிடங்களுக்கு மேல் வலி நீடித்து இருக்காது. அதிக நேரம் வலி நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இதுவே சாதாரண நெஞ்சுவலியாக இல்லாமல் மாரடைப்பாக இருந்தால் வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். அதிக நேரம் வரை நீடிக்கும். எனவே உங்களுக்கு வலி கடுமையாக நீண்ட நேரம் இருந்தால் தயவு செய்து உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது.

​இடதுபுற மார்பு வலி

சாதாரண மார்பு வலி என்றால் மார்பெலும்பின் அடிப்பகுதியில் வலி ஏற்படும். ஆனால் இதுவே மாரடைப்பு என்றால் மார்பில் தோன்றும். அந்த வலி படிப்படியாக தோள்பட்டை, முதுகு, கைகள், தாடை என்று பரவ ஆரம்பித்து விடும்.

குறிப்பாக, பொதுவாக இடது பக்கத்தில் வலியை உணர்வீர்கள். இதயம் இடது பக்கத்தில் இருப்பதால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் என்றால் அந்த இடத்தில் தான் வலி ஏற்படும். சில சமயங்களில் மார்பின் நடுவில் கூட நீங்கள் வலியை உணர முடியும்.

​கவனிக்க வேண்டியவை

பெரும்பாலாக லேசாக வரும் மார்பு வலியை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். அது சில நிமிடங்களிலேயே மாயமாய் மறைந்து விடும்.

நல்ல உணவுப்பழக்கம், காய்கறிகள், பழங்கள், இதய ஆரோக்கியம் தொடர்பான உடற்பயிற்சிகள், எளிமையான கார்டியோ பயிற்சிகள் செய்து இதய பிரச்சனைகள் வராமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். வலி விடாமல் தொடர்ந்து கொண்டே இருந்தால் பீதி அடையாமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதும் நல்லது. உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை கவனித்து செயல்படுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here