பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிடுவதற்காக பிளாக் ஷார்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லுயோ யூயு ஜாவ் சீன ஊடகத்தளமான வெய்போவை பயன்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள போஸ்டர், இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் என்பதை உறுதிப்படுத்துகிறது, உடன் இது 120W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழில் தரத்தின்படி, 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவானது 4500 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை சுமார் 23 நிமிடங்களில் 0 -100 சதவிகிதம் சார்ஜ் செய்யும்.
ஆனால் பிளாக் ஷார்க் நிறுவனமோ, பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் 15 நிமிடங்களுக்குள் 100% சார்ஜ் செய்யலாம் என்கிறது. இது ஒரு ப்ரீமியம் கேமிங் ஸ்மார்ட்போன் மஎன்பதால், இது லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் 888 மூலம் இயக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் அறிமுகமே ஆகாத பிளாக் ஷார்க் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 7.1 இன்ச் அளவிலான குவாட் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவை 3120 x 1440 பிக்சல்கள், 483 பிபி பிக்சல் அடர்த்தி, டிசிஐ-பி 3 கலர் காமெட் மற்றும் 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடன் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் அட்ரினோ 650 ஜி.பீ.யு உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த கேமிங் ஸ்மார்ட்போனில் 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜ் ஆப்ஷன் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 எஸ் மூலம் இயங்குகிறது, மேலும் இது இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் வருகிறது. பிளாக் ஷார்க் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது.