ஆண்களுக்கு சுன்னத்து செய்தபின் எப்படி பராமரிக்கணும்… பெண்களுக்கும் செய்வார்களா? நன்மைகள் என்ன?

0
18

ஆண்குறியின் முன் தோலை நீக்கும் முறைக்கு தான் சுன்னத்து கல்யாணம் அல்லது விருத்த சேதனம் என்கின்றனர். இந்த சடங்கை பொதுவாக இஸ்லாமிய மதங்களில் செய்து வருகிறார்கள். எந்தவொரு வயதிலும் விருத்தசேதனம் செய்ய முடியும். இருப்பினும் குழந்தை விருத்தசேதனம் செய்வது மக்களிடையே பொதுவாக உள்ளது. ஏனெனில் இது பதின்பருவ விருத்தசேதனத்தை விட குறைவான ஆபத்து உடையது.

டீனேஜ் சிறுவர்களில் சுன்னத்து செய்வது மாறுபடலாம். இப்படி சுன்னத்து செய்வதால் ஒரு சில நன்மைகள் இருந்தாலும் அது இளம் வயதினரின் மனநிலையை பாதிக்கும்.

அந்த வகையில் விருத்த சேதனம் பற்றிய சில உண்மைகளை நாம் அறிந்து கொள்வோம்.

​​சுன்னத் சடங்கு

சடங்கு விருத்தசேதனம் இஸ்லாம் மற்றும் யூத மதத்தில் பொதுவானது. புதிதாகப் பிறந்த குழந்தைக்கு விருத்தசேதனம் செய்வது ஆப்பிரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள சில பழங்குடியினரின் சடங்காக உள்ளது.

விருத்தசேதனம் செய்யும் நாடுகள் பெரும்பாலும் குழந்தை பிறந்த ஏழாம் அல்லது எட்டாவது நாளில் இந்த செயல்முறையைச் செய்கின்றன.

புதிதாகப் பிறந்த சிறுவர்களுக்கு விருத்தசேதனம் கட்டாயமில்லை என்றால் கூட அமெரிக்காவில் யூதரல்லாத மற்றும் இஸ்லாமியரல்லாத ஆண்கள் கூட விருத்தசேதனம் செய்திருக்கிறார்கள்.

​நன்மைகள்

எச்.ஐ.வி மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் போன்ற பாலியல் பரவும் நோய்களின் அபாயத்தை விருத்தசேதனம் சற்று குறைக்கலாம்.

விருத்தசேதனம் ஃபிமோசிஸைத் தடுக்கிறது. சுன்னத்து செய்வதால் முன்தோல் குறுக்கம் இறுக்கமாகவும் பின்வாங்குவது கடினமாகவும் மாறும்.

தொடர்ச்சியான பாலனோபோஸ்டிடிஸ் மற்றும் ஃபிமோசிஸ் போன்ற உடல் நல பாதிப்புகள் இளம் பருவ சிறுவர்களில் விருத்தசேதனம் செய்ய காரணமாக அமைகிறது.

பொதுவாக சிறுவர்களுக்கு மயக்க மருந்துகள் கொடுத்து இந்த விருத்தசேதனத்தை செய்கின்றனர். இதனால் அவர்களுக்கு தோலை நீக்கும் போது வலியானது ஏற்படுவதில்லை.

சுகாதாரமான பாதுகாப்பில் மருத்துவ நிபுணர்களால் விருத்த சேதனம் செய்யப்படுகிறது.

சுன்னத்து செய்யப்பட்ட ஆண்களில் ஆண்குறி சுகாதாரம் என்பது எளிமையாக இருக்கும்.

ஒரு வேளை ஒரு நபருக்கு கட்டாய விருத்த சேதனம் செய்தால் அது அவரது மனநிலையை பாதிக்கும்.

​விருத்தசேதனம் என்பது தனிப்பட்ட விஷயம்

சிறு குழந்தைகளின் பெற்றோர் பெரும்பாலும் மத அல்லது சமூக காரணங்களால் விருத்தசேதனம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் வளர்ந்த பின்பு அந்த குழந்தைகள் அல்லது இளம் பருவத்தில் அவர்கள் விருப்பம் இல்லாமல் சுன்னத்து செய்வது அவர்கள் மனநிலையை பாதிக்கும். எனவே அவர்களின் ஒப்புதல் பெற்று செய்வது நல்லது.

அவரது இனப்பெருக்க ஆரோக்கியம், குறிப்பாக பாலியல் செயல்பாடு குறித்து அவருக்கு கவலைகள் மற்றும் கேள்விகள் இருக்கலாம். எனவே மருத்துவ உதவியை நாடுவது மற்றும் அவருக்கு புரிய வைத்த பிறகு செய்வது நல்லது.

விருத்தசேதனம் என்பது சுகாதார தடுப்புக்காக செய்தால் கூட அவைகள் இல்லாமலும் ஒரு ஆணால் ஆரோக்கியமாக இருக்க முடியும். கட்டாய நடைமுறைகள் “ஆண் பிறப்புறுப்பு சிதைவு” என்று கருதப்படலாம். இது குழந்தையின் உளவியல் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

​சுன்னத்து எப்படி செய்யப்படுகிறது

மருத்துவமனையில் உள்ள ஒரு பொது அறுவை சிகிச்சை நிபுணர், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் அல்லது குழந்தை அறுவை சிகிச்சை நிபுணரால் விருத்தசேதனம் செய்யப்படுகிறது. மருத்துவ காரணங்களால் விருத்தசேதனம் தேவைப்பட்டால் உங்கள் டீனேஜரின் பராமரிப்பு மருத்துவர் ஒரு நிபுணரை உங்களுக்கு பரிந்துரைக்கலாம். வீட்டிலேயே சில சமயங்களில் இது சடங்காகவும் செய்யப்படுகிறது. மருத்துவமனை உதவியை நாடாமல் வீட்டு விருத்தசேதனம் மற்றும் சுய விருத்தசேதனம் செய்வது பெரும்பாலும் இரத்தப்போக்கு, நோய்த்தொற்று போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும்.

​விருத்தசேதனம் பற்றி மிக முக்கியமான அம்சங்கள்

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ், இதைச் செய்வதற்கு முன் முன் உள்ளூர் மயக்க மருந்துகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறது. மருத்துவ நிபுணரால் ஊசி மூலம் இதை போடலாம்.

பிறகு முன்தோலை மெதுவாக மருத்துவ நிபுணர்கள் நீக்குகிறார்கள். அதை ஒரு கிளிப் போட்டு மாட்டி விட்டுகிறார்கள்

இரத்தப்போக்கு நிறுத்தப்பட்ட பிறகே முழு முன்தோல் குறுக்கும் அகற்றப்படும்

இரத்த போக்கு நின்ற பிறகும் பல நாட்களுக்கு கிளிப் போடப்படுகிறது.

பாரம்பரிய விருத்தசேதனம் சில இடங்களில் பகுதி அகற்றுதல் அல்லது முன்தோல் குறுக்கு வெட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது.

இரத்தப்போக்கு ஆபத்து காரணமாக உறைதல் கோளாறுகள் உள்ள குழந்தைகள் அல்லது பதின்ம வயதினருக்கு விருத்தசேதனம் ஆபத்தானது என்கிறார்கள் மருத்துவர்கள்.

பைமோசிஸ் சிகிச்சைக்கான விருத்தசேதனம்

பைமோசிஸின் (ஆண் குறியில் வரும் வீக்கம் அல்லது கட்டிகள்) சிக்கல்கள் விருத்தசேதனம் செய்வதை விட கடுமையானவை மற்றும் வாழ்க்கை பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

எனவே மருத்துவர் பரிந்துரை பேரில் பைமோஸிஸ்க்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது.

பதின்பருவத்தில் சுன்னத்து செய்வதால் ஏற்படும் சிக்கல்கள்​

வலி

இரத்தப்போக்கு

வீக்கம்

காயம் தொற்று

காயம் குணப்படுத்துவதில் தாமதம்

அதிகப்படியான தோல் நீக்கம்

விறைப்புத்தன்மை பிரச்சினைகள்

​குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்த பிறகு எப்படி பராமரிக்க வேண்டும்?

சரியான கவனிப்பு, மருத்துவர் பரிந்துரைத்தபடி, குழந்தைகளின் சுன்னத்து சிக்க்கல்களை குறைக்க முடியும்.

ஆண்குறி தலை சில நாட்களுக்கு சிவப்பு நிறமாக இருக்கும். குணப்படுத்தும் செயல்பாட்டின் போது பொதுவாக சில அளவு இரத்தம் அல்லது மஞ்சள் வெளியேற்றத்தைக் நீங்கள் காண முடியும்.

சில நாட்களுக்கு நீங்கள் அசெளகரியத்தை உணரலாம். முழுமையான குணமடைய ஒன்று முதல் இரண்டு வாரங்கள் குழந்தைக்கு ஆகலாம். ஆண்குறியை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.

ஆண்டி- பயாடிக் கிரீம்களுடன் கூடிய டிரஸ்ஸிங் மருத்துவரின் அறிவுறுத்தல்களின்படி செய்யப்படும்.

அறுவைசிகிச்சை நாட்களில் உங்கள் குழந்தைக்கு அதிக காய்ச்சல் அல்லது வேறு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் நீங்கள் மருத்துவ உதவியை நாடலாம்.

​பதின்பருவ விருத்தசேதனத்துக்கு பிறகான பராமரிப்பு

பதின்பருவ வயதினருக்கு விருத்தசேதனம் செய்த பிறகு தொற்றுக்கள் மற்றும் இரத்த போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவர்கள் உடல் செயல்பாடுகளை குறைக்க வேண்டும். ஓய்வெடுக்க வேண்டும். கனமான மற்றும் சுறுசுறுப்பான விளையாட்டுகளை இரண்டு வாரங்கள் வரை தவிர்க்க வேண்டும். கடுமையான உடற்பயிற்சிகள் கூடாது. ஏனெனில் இது இரத்த போக்கை அதிகப்படுத்த வாய்ப்பு உள்ளது.

அறுவை சிகிச்சை செய்த இரண்டாவது நாள் ஸ்பான்ஞ் குளியல் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். குளிக்கும் போது அறுவை சிகிச்சை செய்த இடத்தை தேய்ப்பதோ அல்லது துடைக்கவோ கூடாது. நன்றாக உலர வைக்க வேண்டும்.

அறுவை சிகிச்சை செய்த இரண்டாவது நாள் டிரஸ்ஸிங் ரிமூவ் செய்யப்படும். ஒரு வேளை அது தானாகவே உதிரவில்லை என்றால் 10 நிமிடங்கள் நீரில் நனைக்க வேண்டும்.

ஆண்குறியின் நுனியை காய வைத்த பிறகு மருத்துவர் பரிந்துரைத்த களிம்புகளை தடவுங்கள். ஆடைகளில் ஒட்டாத படி பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு வேளை வலி இருந்தால் பாராசிட்டமல் மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள்.

அறுவை சிகிச்சை செய்த பிறகு 2-4 வாரங்கள் மருத்துவ பரிசோதனை இருக்கலாம். தவறாமல் மருத்துவரை சந்திப்பது அவசியம். புண் ஆறியதா என்று அப்போது தான் அறிய முடியும்.

​பெண் விருத்தசேதனம்

பெண்களுக்கு செய்யப்படும் விருத்தசேதனம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.

விருத்தசேதனம் எந்த விதத்திலும் ஆண் மற்றும் பெண் பாலியல் இன்பத்தை பாதிக்காது.

ஆனால் பெண் விருத்தசேதனம் என்பது மனித உரிமை மீறல்கள் ஆகும். இது எந்தவித நன்மையும் பெண்களுக்கு வழங்குவதில்லை. எனவே உங்க குழந்தைக்கு விருத்தசேதனம் செய்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசித்து விட்டு செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here