சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்…முதல்வர் குடும்பத்துடன் பங்கேற்பு

0
10
அருகே பெரிய சோரகை அருள்மிகு திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு.

சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் மேட்டூர் அருகே பெரிய சோரகையில் அமைந்துள்ள சென்றாய பெருமாள் திருக்கோவிலும் ஒன்று. இந்த திருக்கோவில் இந்து அறநிலை துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இக்கோவிலுக்கு ரூ.71.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மகா மண்டபம், தரை தளம், புதிய கொடிமரம், ஆஞ்சநேயர் சன்னதி, திருமடப்பள்ளி மற்றும் சுற்று பிரகாரதளம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து கடந்த 6 ம் தேதி முகூர்த்த கால் நடுதல், கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சியுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.

அதனைத்தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. மேலும் கோயில் வளாகத்தில் பஞ்ச அக்னி குண்டம் அமைத்து ஐந்து கால பூஜைகள் நடைபெற்றது. இதில் 25 பட்டாச்சாரியர்கள் கலந்து கொண்டு யாக பூஜை செய்தனர். அதனைத்தொடர்ந்து இன்று மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது மனைவியுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த முதல்வருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here