கொரோனா சவால் நிறைந்த காலகட்டம் தொடங்கவுள்ளது: அமைச்சர் எச்சரிக்கை!

0
4
உலகை அச்சுறுத்தி வந்த இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தலை தூக்க தொடங்கியது. இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் முடக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கான சேவையை தவிர அனைத்துவிதமான நடவடிக்கைகளும் முடக்கப்பட்டது.

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்த பொது முடக்கத்தில் தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனவைன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கொரோனா முழுவதுமாக குறைந்து விட்டதாக மக்கள் எண்ணுவதும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, மக்கள் விழுப்புணர்வு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அரசுகள் எச்சரிக்கை விடுத்துவருகின்றன.

இந்த நிலையில், மழைக்காலம் மற்றும் பண்டிகைக் காலம் தொடங்குவதால் கொரோனா தொற்றுக்கான சவால் நிறைந்த காலகட்டம் தொடங்கவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பது தமிழகத்திற்கு பெரும் சவாலாக உள்ளது என தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக எல்லையோர மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை கையாள்வதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த , கடந்த சில மாதங்களாக எந்தவொரு புதிய கொரோனா தொற்றும் இல்லாமல் கட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று வீரியம் கொண்டு எழுந்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் வருகிற 31ஆம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here