தங்கமகன் அஜித்தை பாராட்டிய துணை முதல்வர் ஓபிஎஸ், மகன் ரவீந்திரநாத்

0
6

ஹைலைட்ஸ்:

  • அஜித்தை பாராட்டி ட்வீட்டிய ஓபிஎஸ்
  • துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கம் வென்ற அஜித்
  • அஜித்தை வாழ்த்தும் பிரபலங்கள், ரசிகர்கள்

சென்னையில் நடந்த 46வது மாநில துப்பாக்கிச்சுடும் போட்டியில் கலந்து கொண்டார். சென்னை ரைஃபிள் கிளப் சார்பில் கலந்து கொண்ட அஜித் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அஜித்தின் அணி 4 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்றுள்ளது.

பரிசளிப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அஜித் ரசிகர்கள் பெருமையாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். நடிப்பு தவிர்த்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அஜித் ஒரு இன்ஸ்பிரேஷ் என திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் வாழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில் அஜித்தை பாராட்டி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,
தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார்.

ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தனது தன்னம்பிக்கையாலும், வலிமையாலும் பல்வேறு துறைகளில் வெற்றிகொடி நாட்டும்
நண்பர் திரு. அஜித்குமார் அவர்கள், சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்! என்றார்.
அஜித்தை பாராட்டியதற்காக அவர் சார்பில் ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அஜித்தை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். ஆனால் அவரின் ட்வீட்டை பார்த்த சமூக வலைதளவாசிகளோ, தேர்தல் நேரம் என்பதால் அஜித் ரசிகர்களின் வாக்குகளை எதிர்பார்க்கிறார் அண்ணன் என கிண்டல் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here