பெப்பர் சிக்கன் செய்வது எப்படி

0
14
பெப்பர் சிக்கன் செய்வது எப்படி

 • 35mTotal Time
 • 15mPrep Time
 • 451Calories
(Serving: 4)

முக்கிய பொருட்கள்

 • 500 கிராம் கோழி

பிரதான உணவு

 • 1 தேக்கரண்டி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
 • 2 Numbers நறுக்கிய வெங்காயம்
 • 2 Numbers தக்காளி
 • 3 Numbers பச்சை மிளகாய்
 • 1 தேக்கரண்டி இஞ்சி பேஸ்ட்
 • 1 தேக்கரண்டி பூண்டு பேஸ்ட்
 • 1 1/2 தேக்கரண்டி மிளகு
 • 1/4 கிராம் மஞ்சள்
 • தேவையான அளவு உப்பு

How to make: பெப்பர் சிக்கன் செய்வது எப்படி

Step 1:

ஒரு பேனை எடுத்து அதில் எண்ணெய் சேர்த்துக்கோங்க. எண்ணெய் சூடேறியதும் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்குங்க. இப்போது அதில் நறுக்கிய தக்காளிகளை சேர்த்து கிளறி விடுங்க.

samayam tamil

Step 2:

கடாயிலிருக்கும் வெங்காயமும் தக்காளியும் சீக்கரமா வேக அதில் உப்பை சேர்த்துக்கோங்க. 4 முதல் 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடுங்க.

samayam tamil

Step 3:

இஞ்சி – பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் தூளையும் பேனில் சேர்த்து எல்லா பொருட்களையும் நல்லா கலந்து விடுங்க. இப்போது இந்த கலவையை 5 முதல் 7 நிமிடங்கள் வேக வைங்க. அதன் பின் கழுவி வைத்திருக்கும் சிக்கனை சேர்க்கவும்.

samayam tamil

Step 4:

பேனின் மூடியை மூடி சிக்கனிலுள்ள சாறு முழுசா வற்றிப் போய் சிக்கன் மென்மையாகும் வரை வேக வெச்சுக்கோங்க. கேஸை ஆஃப் பண்ணிட்டு, இதை சாதம், சப்பாத்தி போன்றவற்றோடு சைட் டிஷ்ஷாக பரிமாறுங்க.

samayam tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here