பிரச்சாரத்தை தொடங்கிய விஜயகாந்த்.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

0
7

ஹைலைட்ஸ்:

  • கும்மிடிப்பூண்டியில் கேப்டன் விஜயகாந்த் பிரச்சாரம்
  • தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சி அமமுக கூட்டணியில் இணைந்து தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. மொத்தம் 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.

இந்நிலையில், தேமுதிக தலைவர் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். கும்மிடிப்பூண்டியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய விஜயகாந்த், தேமுதிக வேட்பாளர் டில்லியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

இதேபோல, திருத்தணி தொகுதிக்கான தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்தும் பரப்புரை செய்தார். கும்மிடிப்பூண்டியில் மேளதாளங்களுடன் விஜயகாந்துக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

உடல்நலக் குறைவு காரணமாக இந்த தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடவில்லை. எனினும், இறுதிகட்டத்தில் பிரச்சாரப் பணிகளில் அவர் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

விஜயகாந்த் முதன்முதலாக போட்டியிட்டு வெற்றிபெற்ற விருத்தாசலம் தொகுதியில் அவரது மனைவியும், கட்சி பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here