எடப்பாடி முதல்வரானது இறைவனாலா, சசிகலாவாலா? -திமுக தயாநிதி கேள்வி!

0
10
திமுக எம்பி தயாநிதி மாறன், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பிலான தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நான்கு நாள் சுற்றுப்பயணத்தில் திருவாரூர் நகரில் நேற்றிரவு அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது:

தான் இறைவன் அருளால் முதல்வர் ஆனதாக தற்போது கூறி வருகிறார். 20 ஆண்டுகளுக்கு முன் இப்படி கூறியிருந்தால் நாம் நம்பி இருக்கலாம்.

சசிகலாவின் காலில் விழுந்து அவரின் அருளால் முதல்வரான பின், வரம் கொடுத்தவர் தலையில் கை வைப்பது போல சசிகலாவுக்கு எடப்ாடி துரோகம் செய்தார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது எனக் கூறி ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்படவில்லை.

தமிழக அரசு பொங்கலுக்காக பொதுமக்களுக்கு 2500 ரூபாய் கொடுக்கவில்லை. எதிர்வரும் தேர்தல் ஓட்டுக்காக கொடுத்துள்ளார்கள்.

‘மக்களுக்கு கொடுக்கும் 2500 ரூபாயை டாஸ்மாக் கடை மூலம் திரும்ப பெற்றுக் கொள்வோம்’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார்.

வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் வியாபாரம் செய்து வருகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

இதனை எதிர்த்தால் பதவி பறிபோய்விடும் என்ற பயத்தில் தான் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக எடப்பாடி அரசு செயல்படுகிறது என்று தயாநிதி மாறன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here