உஷார் மக்களே: கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு இதை மட்டும் செஞ்சிறாதீங்க!

0
4
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு கொரோனா போடும் பணிகள் தொடங்கிவிட்டன. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி ஒத்திகை பணிகள் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், ஜனவரி 16ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை வருகிற 16ஆம் தேதி முதல் போடப்பட உள்ளது. இதற்காக, புனேவிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்தது. கோவிஷீல்டு தடுப்பூசி 5.36 லட்சமும், கோவாக்சின் தடுப்பூசிகள் 20 ஆயிரமும் வந்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், வயதானவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படவுள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தை மதுரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார். முதற்கட்டமாக 307 மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, அனைத்து மாவட்டங்களுக்கும் தடுப்பூசி அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் , தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது. 2ஆவது டோஸ் போடும் வரையிலும் 28 நாட்களுக்கு இடைப்பட்ட நாட்களில் மது அருந்த கூடாது என்று தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு அச்சமும் இல்லாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர், தடுப்பூசி செலுத்தப்பட்டதும் எதிர்ப்பு சக்தி வந்துவிட்டது என பொதுமக்கள் எண்ணிவிடக் கூடாது. தடுப்பூசி போட்ட 42 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டாம். தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here