50 வயதுக்கு மேல் எந்தெந்த நோயெல்லாம் வரும்…? என்னென்ன டெஸ்ட், தடுப்பூசி போடணும்?

0
7

எடுத்துக்காட்டாக 50 முதல் 75 வயதுடைய மூன்று பேரில் ஒருவர் பெருங்குடல் புற்றுநோய்க்கு உள்ளாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 65 வயதிற்கும் மேற்பட்டவர்களில் சுமார் 30 சதவீதம் பேருக்கு வருடத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் உங்கள் வாழ்வில் அரைநூற்றாண்டை கடந்திருக்கும் பட்சத்தில் உங்கள் உடலுக்கு சில சோதனைகளை மேற்கொள்வது அவசியமாகிறது.

​கட்டாயமான சில தடுப்பூசிகள்

50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து பெரியவர்களுக்கும் சி.டி.சி பரிந்துரைக்கப்படுகிறது. ஷிங்க்ரிக்ஸ் என்பது ஒரு புதிய தடுப்பூசி ஆகும். இதை 2 முதல் 6 மாதங்கள் இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும். இது பழைய ஜோஸ்டாவாக்ஸை விட மிகவும் பயனுள்ள தடுப்பூசியாக உள்ளது. அம்மைக்கான மருந்தான சோஸ்டாவாக்சர் மருந்தை சிலர் எடுத்துக்கொள்கின்றனர். ஆனாலும் அவர்கள் ஷிங்க்ரிஸ் தடுப்பூச்சியை பெறுவது நல்லது. ஏனெனில் பெரும்பாலான மக்கள் வைரஸ் நோய்களுக்கு ஆளாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

​காய்ச்சல்

வயதான அனைத்து பெரியவர்களும் ஒவ்வொரு ஆண்டும் காய்ச்சல் ஊசியை போட்டுக்கொள்ள வேண்டும். காய்ச்சலால் இறப்பவர்கள் அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களில் பெரும்பாலோனோர் அதிக வயதுடையவர்களாகதான் இருக்கிறார்கள். நீங்கள் 65 வயதை கடந்தவராக இருந்தால் வழக்கமான காய்ச்சல் தடுப்பூசியை காட்டிலும் நான்கு மடங்கு அதிகமான ஆண்ட்க்ஜென்களை கொண்ட ஃப்ளூசோன் ஹை டோஸ் தடுப்பூசி பற்றி கேளுங்கள். ஃப்ளூட் எனப்படும் மற்றொரு தடுப்பூசி இன்னும் அதிகமான பாதுக்காப்பை வழங்கும்.

​நிமோகோகல் தடுப்பூசி:

நிமோனியா பாக்டீரியாவானது வயதானவர்களையே அதிகம் தாக்குகிறது. இதனால் இரத்த நோய் தொற்றுகள் அல்லது மூளைக்காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பி.சி.வி 13 (ப்ரெவ்னர் 13) மற்றும் பி.பி.எஸ் 23 (நியூமோவாக்ஸ் 23) ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் நிமோனியா நோயில் இருந்து உங்களை பாதுகாக்கும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த தடுப்பூசியை பெற்றிருக்க வேண்டும்.

டிடாப் ஷாட் அல்லது பூஸ்டர்

டிடாப் (டெட்டனஸ், டிப்தீரியா மற்றும் பெர்டுசிஸ்) பூஸ்டர் என்பது தடுப்பு மருந்தாகும். இது பதின் பருவ வயதுடையவர்களுக்கு அளிக்க வேண்டிய மருந்தாகும். ஒவ்வொரு 10 வருடத்திற்கு ஒரு முறையும் டெட்னஸ் மற்றும் டிப்திரியாவுக்கு எதிராக இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

​பெருங்குடல் புற்றுநோய்

பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் 50 வயதுக்கு பிறகு பெருங்குடல் புற்றுநோயை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதை பரிசோதனை செய்ய வேண்டும். இதற்காக புற்றுநோய் மற்றும் பாலிப்களை கண்டறியக்கூடிய சோதனைகளை செய்யலாம். உங்கள் தலைமுறையில் யாருக்காவது முன்பே குடலிறக்க புற்றுநோய் உள்ளது என்றால் இந்த செயல்முறையை செய்து விரைவில் புற்றுநோய் உள்ளதா என சரிப்பார்க்கவும். ஆப்பிரிக்க அமெரிக்கர் மற்றும் அமெரிக்க இந்தியர்களுக்கு இந்த பிரச்சனை 45 வயதிலேயே துவங்குகிறது.

இதற்காக நீங்கள் பல வழிகளில் சோதிக்கப்படலாம். ஒவ்வொரு சோதனையிலும் நன்மைகள் மற்றும் குறைப்பாடுகள் உள்ளன. எனவே உங்கள் மருத்துவரிடம் இதுப்பற்றி பேசுங்கள். உங்களிடல் கொலோனோஸ்கோபி இருந்தால். பாலிப்கள் புற்றுநோயாக மாறுவதற்கு முன்பே அவற்றை அகற்றலாம்.

​நீரிழிவு நோய்

இரண்டாம் வகை நீரிழிவு நோயானது 45 வயதிலேயே துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே அவற்றை சோதிக்க வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் பரிசோதனை செய்ய வேண்டும். உங்கள் எடை இயல்பை விட அதிகமாக இருந்தால் அல்லது உங்கள் தலைமுறையில் ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தால் அடிக்கடி சர்க்கரை நோய் சோதனை செய்துக்கொள்வது நல்லது. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில சோதனைகளை உங்கள் மருத்துவரிடம் பரிந்துரைக்கலாம். ஏ 1 சி: கடந்த 2 முதல் 3 மாதங்களில் உள்ள உங்கள் சராசரி இரத்த குளுக்கோஸ் அளவை கணக்கிடும்.

ஃபாஸ்டிங் பிளாஸ்மா குளுக்கோஸ்: நீங்கள் குறைந்தது 8 மணிநேரம் தண்ணீரை தவிர வேறு எதையும் உட்கொள்ளாமல் இருந்த பிறகு உங்கள் ரத்த சர்க்கரை அளவை சரிப்பார்க்க வேண்டும். வாய்வழி குளுக்கோஸ் சோதனை: இந்த முறையில் உங்கள் குளுக்கோஸ் அளவு அளவிடப்பட்ட பிறகு உங்களுக்கு இனிப்பு பானம் தரப்படும். அதன் பிறகு 2 மணி நேரம் கழித்து உங்கள் சர்க்கரை அளவு மீண்டும் அளவிடப்படும்.

​எலும்பு திடம்

உங்கள் உடலில் உள்ள எலும்புகள் உங்கள் வயதுக்கு ஏற்ப வலிமை இழக்க துவங்கி விடும். எனவே இதனால் வயதானவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே உங்கள் இடுப்பு மற்றும் முதுகெலும்புகளின் அடர்த்தியை பரிசோதனை செய்ய எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் போன்றவற்றை உங்கள் மருத்துவரிடம் பரிந்துரைக்கலாம்.

65 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த சோதனையை மேற்கொள்ளலாம். இளமையான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஆஸ்டியோ பொரோசொஸ் வர வாய்ப்புள்ளது. புகைப்பிடிப்பவர்கள், எடை குறைவாக உள்ளவர்கள், முன்பே எலும்பு முறிவுகள் உள்ளவர்கள், வழக்கமான ப்ரெட்னிசோன் அல்லது பிற ஸ்டெராய்டுகளை எடுத்துக்கொள்பவர்கள் மற்றும் ஒரு நாளைக்கு மூன்றுக்கும் மேற்பட்ட தடவை மது பானங்கள் எடுத்து கொள்பவர்கள் எலும்பு வலிமையை இழக்கின்றனர். எக்ஸ்ரே ஸ்கேன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் முடிவுகள் இயல்பானவை என்றால் அடுத்த பல ஆண்டுகளுக்கு நீங்கள் இந்த சோதனையை எடுத்துக்கொள்ள தேவையில்லை. ஆனால் நீங்கள் குறைவான எலும்பு அடர்த்தியை பெற்றிருக்கும் பட்சத்தில் நீங்கள் அடிக்கடி சோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

​பார்வை

தற்சமயம் பள்ளி பிள்ளைகளே கண் பிரச்சனையால் கண்ணாடி போடுவதை பார்க்கிறோம். அப்படியிருக்கையில் 50 வயதை கடந்தவர்கள் 2 முதல் 4 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக கண் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும். 55 வயதிற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் கண் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.

உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் அல்லது உங்கள் பார்வையில் ஏதேனும் மாற்றல் ஏற்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை அணுகி என்ன செய்யலாம் என கேட்கவும்.

​இரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் என்பது பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனையாக உள்ளது. எனவே வயதானவர்கள் ஆண்டுதோறும் இரத்த அழுத்தத்தை சரிப்பார்ப்பது அவசியமாகிறது. பொதுவாக 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தம் 80 முதல் 120 வரை இருக்கும். ஆனால் உங்கள் இரத்த அழுத்தம் 120க்கு மேல் இருந்தால் கண்டிப்பாக உங்கள் மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.

​கொழுப்பு

தேவையில்லாத கொழுப்பானது உடலில் குப்பை போல சேர்ந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன. ஆனால் கொழுப்பில் நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு இரண்டும் உள்ளன. எனவே அதிக அடர்த்தி கொண்ட நல்ல கொழுப்பு மற்றும் குறைந்த அடர்த்தி கொண்ட (கெட்ட) லிப்போ புரோட்டின் கொழுப்புகளின் அளவை சரிப்பார்ப்பது அவசியமாகிறது. இதற்காக நீங்கள் இரத்த பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.

சில கொழுப்புகள் உங்கள் தமனிகளை மூடி மறைத்து ஒரு தடையை உருவாக்கிவிடும். இது பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கு வழி வகுக்கும். எனவே உடல்நிலையை வைத்து உடலை எப்போதோ அல்லது அடிக்கடியோ சோதனை செய்ய வேண்டி இருக்கும்.

​பெண்களுக்கான சோதனைகள்

மோமோகிராம்

பெரும்பாலான பெண்களுக்கு மார்பக புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதை கண்டறிவதற்கான சோதனைதான் மோமோகிராம் சோதனை. அமெரிக்க புற்றுநோய் சங்கம் இதுப்பற்றி கூறும்போது 45 வயதில் தொடங்கி பெண்கள் வருடம் ஒருமுறை மோமோகிராம்களை செய்துக்கொள்ள வேண்டும் என கூறுகிறது. அதன் பின்னர் 55 வயது முதல் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒரு முறையும் மோமோகிராம் சிகிச்சையை மேற்க்கொள்ள வேண்டும் என கூறுகிறது.

இதற்கு அமெரிக்க தடுப்பு சேவை பணிக்குழு குறைவான அட்டவணையையே வழங்கியுள்ளன. ஏனெனில் அதிக சோதனை செய்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது சோதனை குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். ஆனால் 50 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். பின்னர் 75 வயதிற்கு பிறகு பரிசோதனை செய்ய தேவையில்லை.

​கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

பெண்கள் ஒவ்வொரு 3 வருடங்களுக்கு ஒருமுறையும் கர்ப்பப்பை சோதனயான பிஏபி சோதனையை மேற்கொள்ளலாம். அதே போல ஒவ்வொரு 5 வருடத்திற்கு ஒரு முறையும் எச்.பி.வி (மனித பாபிலோமா வைரஸ்) சோதனையை செய்யலாம். அல்லது ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையும் இந்த இரண்டு சோதனைகளையும் சேர்த்து செய்யலாம். கர்ப்ப பை வாயில் ஏற்கனவே எதாவது பிரச்சனையை நீங்கள் கண்டிருந்தால் 65 வயதுக்கு பிறகு நீங்கள் தொடர்ந்து ஐந்து வருடத்திற்கு ஒருமுறை இந்த சோதனையை செய்ய வேண்டி இருக்கும்.

​ஆண்களுக்கான சோதனை

பி.எஸ்.ஏ சோதனை

இது ஆண்களுக்கு புரோ ஸ்டேட் புற்றுநோய் இருக்கிறதா என்பதை சரிப்பார்க்கும் சோதனை ஆகும். இந்த புற்றுநோயை சரிப்பார்க்க இது சிறந்த பரிசோதனை என்றாலும் இந்த சோதனை வசதி இல்லாத சமயத்தில் பி.எஸ்.எ சோதனை மூலம் புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதை கண்டறியலாம். சில சமயங்களில் புற்றுநோய் இருப்பதை கண்டறிய பயாப்ஸி சோதனை தேவைப்படலாம். புரோஸ்டேட் புற்றுநோய்க்கான ஆபத்து உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் உங்கள் மருத்துவரே உங்களுக்கு இந்த பரிசோதனையை பரிந்துரைப்பார். எனவே பி.எஸ்.ஏ சோதனைகள் உங்களுக்கு பயனுள்ள சோதனையா என்பதை உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here