எஃப்ஏ கோப்பை: அரையிறுதி அட்டவணை வெளியீடு…செல்சீ, மான்செஸ்டர் சிட்டி பலப்பரீட்சை

0
10

கால்பந்தாட்டத்தில் மிக பழமை வாய்ந்த கோப்பையான எஃப்ஏ கோப்பை 1871ஆம் ஆண்டு துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது, எஃப்ஏ கோப்பையை வெல்வது என்பது கௌரவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. பொதுவாக ஆர்சனல் அணி இந்த கோப்பையை தட்டிச் செல்லும், இதுவரை 14 முறை ஆர்சனல் அணி இந்த கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த ஆண்டு சவுத்ஹாம்ப்டன் அணிக்கு எதிராக தோல்வி அடைந்து காலிறுதி சுற்றுக்கு கூட முன்னேறவில்லை என்பதால் இந்த ஆண்டு வேறு ஒரு அணி வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கால் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

காலிறுதிப் போட்டியில் ஷெபீல்ட் அணிக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற செல்சீ அணியும், எவர்டன் அணிக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மான்செஸ்டர் சிட்டி அணியும் மோதுகின்றன. இவ்விரு அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

ஆனால் தற்பொழுது செல்சீ அணி புதிய மேலாளர் நியமித்ததில் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்த ஆட்டத்தில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் போனமத் அணிக்கு எதிராக 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சவுத்ஹாம்ப்டன் அணியும், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிராக 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற லெஸ்டர் சிட்டி அணியும் மோதுகின்றது.

சென்ற சீசனில் சவுத்ஹாம்ப்டன் அணிக்கு எதிராக 9-0 என்ற கோல் கணக்கில் லெஸ்டர் அணி வெற்றி பெற்று சவுத்ஹாம்ப்டன் அணியின் ரசிகர்களை கடுமையாக பாதித்தது, அதற்கு பழிவாங்கும் எண்ணத்தில் சவுத்ஹாம்ப்டன் அணி இந்த ஆட்டத்தில் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரையிறுதி ஆட்டத்திற்கு வந்த லெஸ்டர் அணி இதுவரை எஃப்ஏ கோப்பை வென்றதில்லை.

இந்த ஆண்டு அவர்கள் வெல்வதற்கு சரியான வாய்ப்பாக அமைகிறது. காலிறுதியில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிராக அவர்கள் ஆடிய ஆட்டம், பலரது கண்களை அவர்கள் பக்கம் திரும்ப செய்துள்ளது. இறுதிப்போட்டிக்கு நுழைய போவது யார் என்பது ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி உலகம் அறியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here