உங்க மாமியார் உங்களுக்கு மேல இருக்காங்களே குஷ்பு

0
3

ஹைலைட்ஸ்:

  • குஷ்பு மாமியாரை பார்த்து வியக்கும் ரசிகர்கள்
  • மாமியாருக்கு வாழ்த்து சொன்ன குஷ்பு

அரசியலில் பிசியாக இருந்தாலும் எப்பொழுதுமே ட்விட்டரில் படு ஆக்டிவாக உள்ளார். ரசிகர்கள், ரசிகைகளின் ட்வீட்டுகளுக்கு பதில் அளிப்பார், லைக்ஸ் போடுவார், நல்ல ட்வீட்டுகளை பார்த்தால் ரீட்வீட் செய்வார்.

தன்னை விளாசும் நெட்டிசன்களை கிழித்து தொங்கவிடுவார். மேலும் தன் செல்ல மகள்களின் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு என் உலகம் என்று நெகிழ்வார். கணவர் சுந்தர் சி.யை பற்றி பெருமையாக ட்வீட் செய்வார். குஷ்புவின் மாமியாருக்கு இன்று பிறந்தநாள்.

மாமியார் என்றாலே மருமகள்களுக்கு ஆகாது என்பார்கள். ஆனால் குஷ்பு விஷயத்தில் அப்படி இல்லை. அவர் தன் மாமியாருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த ட்வீட்டில் குஷ்பு கூறியிருப்பதாவது,
எங்கள் ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எங்களின் இதயங்களையும், இல்லத்தையும் ஆட்சி செய்பவர். நாங்கள் ஒரு குடும்பமாக ஒற்றுமையாக இருப்பதற்கு காரணம் அவர் தான். என் மாமியார் தெய்வானை சிதம்பரம். எங்களை வழிநடத்த நீங்கள் கிடைத்ததற்கு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். லவ் யூ அம்மா என்று தெரிவித்துள்ளார்.

குஷ்புவுக்கு செல்ஃபி குயீன் என்று ஒரு பெயர் உண்டு. அந்த அளவுக்கு அழகாக செல்ஃபி எடுப்பார். அவரின் செல்ஃபிக்களை பார்க்கும் ரசிகர்கள், மேடம் உங்களுக்கு வயசே ஆகாதா?. வளர்ந்த பிள்ளைகளுக்கு அம்மா என்று சொல்ல முடியாத அளவுக்கு இளமையாக இருக்கிறீர்கள். நாட்கள் செல்ல செல்ல இளமையும், அழகும் கூடிக் கொண்டே போகிறது என்பார்கள்.

இந்நிலையில் மாமியாரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ,

குஷ்பு அக்காவுக்கு மேல இருக்கிறாரே அவரின் மாமியார். இந்த வயதிலும் மிகவும் இளமையாகத் தெரிகிறார். மாமியாரும், மருமகளும் இப்படி ஒற்றுமையாக இருப்பதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. சுத்திப் போடுங்க மேடம். அழகான குடும்பம். இன்று போல் என்றும் சந்தோஷமாக இருங்கள்.

எங்கள் சார்பில் உங்கள் மாமியாருக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள் என கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here