அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை அடக்கியவருக்கு முதல் பரிசு!

0
4
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இந்த வருடம் முதல் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்க 430 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், 340 மாடுபிடி வீரர்களுக்கு மட்டும் கடைசி கட்ட பரிசோதனை செய்த பின்பு போட்டியில் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று காலை 8 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மற்றும் அமைச்சர் செல்லூர் ராஜுவும் வாடிவாசலை கொடி அசைத்து துவங்கி வைத்தனர். சம்பவ இடத்துக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் நேரில் வந்து ஜல்லிக்கட்டு விழாவை கண்டு களித்தனர்.

இந்நிலையில், இன்று மாலை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிறைவடைந்ததும், பரிசுகள் வழங்கப்பட்டன. அதில், 26 காளைகளை அடக்கிய சிறந்த வீரர்கள் திருநாவுக்கரசு, மற்றும் விஜய் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.

மொத்தம் 8 சுற்றுக்களாக நடந்த போட்டியில் 520 காளைகள் 340 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில், மாடுபிடி வீரர்கள் 46 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 10 பேர், பார்வையாளர்கள் இருவர் என 58 பேர் காயமடைந்தனர். சிறந்த காளை என்று G.R. கார்த்திக் காளை பரிசுகளை பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here