சசிகலாவிற்கு கொரோனா பாதிப்பு – ஐசியூவில் தொடர் சிகிச்சை!

0
9
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், முன்னாள் பொதுச் செயலாளருமான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது தண்டனைக் காலம் நிறைவு பெறவுள்ளதை அடுத்து வரும் 27ஆம் தேதி விடுதலை ஆகிறார். இந்த சூழலில் நேற்று முன்தினம் மாலை திடீரென சுவாச பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கு RT-PCR பரிசோதனை செய்யப்பட்டதில் இல்லை என்று தெரியவந்தது. இந்த சூழலில் காய்ச்சல், தொடர் சுவாச பாதிப்பு இருந்ததை அடுத்து, நேற்று விக்டோரியோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட RT-PCR பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தீவிர நுரையீரல் தொற்று இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் விக்டோரியோ மருத்துவமனையின் மேற்பார்வையாளர் டாக்டர் ரமேஷ் கிருஷ்ணா கூறுகையில், சசிகலாவின் உடல்நிலை சீராக இருக்கிறது. வெண்டிலேட்டர் போன்ற எந்தவித செயற்கை சுவாசக் கருவிகளும் பொருத்தப்படவில்லை.

அவருக்கு தீவிர நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது. CT மதிப்பு 16/25ஆக இருக்கிறது. அவருக்கு டைப்-2 சர்க்கரை நோய் இருப்பதால் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றார். இதற்கிடையில் உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்கள் பெங்களூருவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. விரைவில் வரவுள்ள நிலையில், அதிமுக – இணைப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சசிகலாவிற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு அவரது விடுதலையை மேலும் தள்ளி போடக்கூடும் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here