தமிழக அரசின் புதிய தலைமை செயலாளர் இவர்தானா?

0
3
தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து, 2019ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சண்முகம் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். ஜூலை 1ஆம் தேதி அவர் தமிழக அரசின் 46ஆவது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூலை மாத இறுதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், அவரது பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு அக்டோபர் மாதத்தில் மேலும் மூன்று மாதங்கள் அதாவது 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

அதன்படி, தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும், தனக்குப் பதவி நீட்டிப்பு வேண்டாம் என அவர் எழுதிக் கொடுத்து விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ஹன்ஸ் ராஜ் வர்மா ஐஏஎஸ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. ஊரக வளர்ச்சி துறை செயலாளரான ஹன்ஸ்ராஜ் வர்மா 1986ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் வர்மா, தற்போது கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ளார். கூடுதல் பொறுப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையையும் அவர் கவனித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here