லாக்டவுனால் சூர்யா இப்படி ஒரு முடிவு எடுத்துவிட்டாரா? ரசிகர்கள் அதிர்ச்சி

0
6
Suriya
தமிழ் சினிமாவில் நடிகர் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். 20 வருடங்களை கடந்த அவரது சினிமா கெரியரில் அவர் அதற்காக மிக கடினமாக உழைத்தே தற்போது இந்த நிலைக்கு வளர்ந்திருக்கிறார்.

தற்போது கொரோனா லாக் டவுனில் மற்ற சினிமா நட்சத்திரங்களை போலவே சூர்யாவும் ஷூட்டிங் இல்லாததால் தனது வீட்டிலேயே தான் இருக்கிறார். அவர் ஏற்கனவே நடித்து முடித்துவிட்ட சூரரைப்போற்று படம் ரிலீஸுக்கு தயாராக இருந்தாலும் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால் அதை வெளியிட முடியாத சூழ்நிலை தான் உள்ளது.

ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதம் துவக்கத்தில் சூரரைப் போற்று ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில் அது எப்போது ரிலீஸ் ஆகும் என்பது பெரிய கேள்வி குறியாகவே உள்ளது.

இந்நிலையில் சூர்யா அடுத்து இயக்கத்தில் என்ற படத்தில் நடிக்க இருந்தார். இதில் சூர்யா அண்ணன் தம்பி என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. மேலும் நடிகை ராசி கண்ணா இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் ஷூட்டிங் துவங்க திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு போடப் பட்டதால் படப்பிடிப்பை துவங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட அருவா படம் அந்த தேதியில் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்பது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது பரவி வரும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால்.. சூர்யா இந்த படத்துக்கான ஷூட்டிங்கை கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும் நின்ற பிறகு தான் துவங்கலாம் என்கிற முடிவை எடுத்திருக்கிறாராம். அதனால் அரசு முன்கூட்டிய ஷூட்டிங் நடத்த அனுமதி அளித்தாலும் அருவா படப்பிடிப்பு அடுத்த வருடம் தான் துவங்கும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த மற்றும் அஜித் நடித்து வரும் வலிமை ஆகிய படங்களுக்கும் அவர்கள் இதே போன்ற ஒரு முடிவைத் தான் எடுத்து இருக்கின்றனர். படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் தொழிலாளர்களின் பாதுகாப்பை கருதி தான் இந்த முடிவை அவர்கள் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர்களைப் பின்பற்றி சூர்யாவும் அதே போன்ற ஒரு முடிவை எடுத்துள்ளார் என தெரிகிறது.

அருவா படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போவதாக கூறப்படுவது சூர்யாவின் ரசிகர்களுக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

அருவா படம் மட்டுமின்றி சூர்யா தற்போது தன் கைவசம் வெற்றிமாறனின் வாடிவாசல் என்ற படத்தை வைத்துள்ளார். அந்த படம் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாக உள்ளது. அசுரன் படத்தை தொடர்ந்து இந்த படத்தையும் ஒரு நாவலின் அடிப்படையில் தான் இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார்.

மேலும் தற்போது கொரோனா லாக் டவுனில் சூர்யா ரசிகர்கள் மக்களுக்குச் செய்துவரும் உதவிப் பணிகளை பாராட்டி சமீபத்தில் ஒரு ஆடியோவை வெளியிட்டு இருந்தார் சூர்யா. அது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வைரல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் மட்டும் உதவு செய்வது சுலபம் , தொடர்ந்து உதவி செய்வது சாதாரண விஷயம் அல்ல. அத்யாவசிய தேவைகள் கூட கிடைக்காத விளிம்புநிலை மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்யுங்கள் என ரசிகர்களுக்கு சூர்யா அந்த ஆடியோவில் கூறி இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here