ரூ.1500 – ரூ.50000 வரை தள்ளுபடி; மார்ச் 26 வரை Flipkart-ல் அள்ளிக்கோ அள்ளிக்கோ!

  0
  5

  ஹைலைட்ஸ்:

  • பிளிப்கார்டில் பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனை
  • மார்ச் 26 வரை நீளும்
  • மொபைல்கள், லேப்டாப், டிவி மீது ஆபர்கள்

  பிளிப்கார்ட் வலைத்தளம் அதன் பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையை அறிவித்துள்ளது. பிளஸ் உறுப்பினர்களுக்கான ஆரம்ப அணுகலை வழங்கிய பின்னர் இப்போது இந்த ஸ்பெஷல் சேல் அனைவருக்கும் அணுக கிடைக்கிறது.

  மார்ச் 26 வரை நடக்கும் இந்த பிளிப்கார்ட் விற்பனையில் மொபைல் போன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பிற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது பல வகையான தள்ளுபடிகள் கிடைக்கும்.

  பிளிப்கார்ட் தனது கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடியை வழங்க எஸ்பிஐவங்கியுடன் இணைந்துள்ளது. இந்த விற்பனையில் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், அதே சமயம் நீங்கள் எதையும் மிஸ் பண்ண கூடாது என்பதற்காக – சில அட்டகாசமான பிக் சேவிங் டேஸ் 2021 சேல் தள்ளுபடிகளை தேர்ந்தெடுத்து இங்கே பட்டியலிட்டுளோம்.

  முதலில் நிகழும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையில் நீங்கள் மிஸ் பண்ணகூடாத மொபைல் போன் ஆபர்களை பற்றி பார்ப்போம்:

  ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ (ரூ.46,999 முதல்)

  ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 ப்ரோ ஆகியவைகளை இந்த வார விற்பனையின் போது வழக்கத்தை விட சற்றே குறைந்த விலையில் வாங்கலாம். ஐபோன் 11-ஐ ரூ.46,999 க்கும், ஐபோன் 11 ப்ரோவை ரூ.79,999 க்கும் வாங்கலாம். இதுதவிர்த்து பிளிப்கார்ட் தளம் இந்த ஐபோன் மாடல்களில் கூடுதல் எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியாக ரூ.16,500-ஐ வழங்குகிறது. மேலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும்.

  ஐபோன் எஸ்.இ (ரூ.29,999)

  இந்த வாரம் பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையின் போது ஆப்பிளின் ஐபோன் எஸ்இ மாடலை அதன் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். ஐபோன் எஸ்இ தற்போது பிளிப்கார்ட் விற்பனையின் போது ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கும் (இதன் எம்ஆர்பி ரூ.39,900 ஆகும்).

  மேலும் நீங்கள் வாங்கிய பழைய ஸ்மார்ட்போனை மாற்றுவதன் மூலம் தள்ளுபடி விலையிலிருந்து ரூ.16,500 (அதிகபட்சம்) சலுகை பெறலாம். நீங்கள் குறைந்த விலையில் ஒரு iOS சாதனத்திற்கு மாற விரும்பினால், மேலும் சிறியதாக ஒரு ஸ்மார்ட்போனை தேடினால், ஐபோன் எஸ்இ உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

  ஐபோன் எக்ஸ்ஆர் (ரூ.38,999)

  தற்போது தள்ளுபடி விலையில் விற்கப்படும் மற்றொரு ஐபோன் மாடல் ஐபோன் எக்ஸ்ஆர் ஆகும். இந்த வாரம் பிளிப்கார்ட்டில் நடக்கும் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது இது ரூ.38,999 க்கு வாங்க கிடைக்கும். இதன் எம்ஆர்பி ரூ.47,900 ஆகும்.

  ஐபோன் எக்ஸ்ஆர் 6.2 இன்ச் ரெடினா டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது ஆப்பிளின் ஏ 12 பயோனிக் சிப்செட்டால் இயக்கப்படுகிறது. இது சிங்கிள் 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 7 மெகாபிக்சல் செல்பீ கேமராவுடன் வருகிறது. பிளிப்கார்ட்டின் விற்பனையில் ஐபோன் எக்ஸ்ஆரில் தொகுக்கப்பட்ட பரிமாற்ற சலுகையும் அடங்கும், அதன் வழியாக அதிகபட்சமாக ரூ.16,500 சலுகை பெறலாம்.

  போக்கோ எக்ஸ் 3 (ரூ.14,499)

  போக்கோ எக்ஸ் 3 (6 ஜிபி + 64 ஜிபி) இந்த வார பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையின் போது பிளிப்கார்ட்டில் ரூ.14,499 க்கு (எம்ஆர்பி ரூ.19,999) வாங்க கிடைக்கும்.

  இந்த மலிவு விலைஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி SoC மூலம் இயக்கப்படுகிறது, இது 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது.

  போக்கோ எக்ஸ் 3 ஒரு தொகுக்கப்பட்ட பரிமாற்ற சலுகையுடன் வருகிறது. இதன் மூலம் ஒருவர் கூடுதல் தள்ளுபடியாக ரூ.13,550 வரை பெறலாம்.

  ரெட்மி 9 ப்ரைம் (ரூ.9,499)

  ரூ.10,000 க்குள் ஒரு தரமான ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால், ரெட்மி 9 ப்ரைம் மாடலை நிகழம் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது நீங்கள் மிஸ் பண்ணவே கூடாது. இது ரூ.9,499 க்கு (எம்ஆர்பி ரூ. 11,999) வாங்க கிடைக்கிறது.

  நீங்கள் பழைய ஸ்மார்ட்போனை பரிமாறிக்கொள்ளலாம் மற்றும் அதன் வழியாக ரூ.8,900 வரை கூடுதல் தள்ளுபடியை பெறலாம்.

  ரெட்மி 9 ப்ரைம் ஆனது 6.53 இன்ச் புல் எச்டி + டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது மீடியாடெக் ஹீலியோ ஜி 80 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவுடன் வருகிறது.

  இப்போது நிகழும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையில் நீங்கள் மிஸ் பண்ணகூடாத லேப்டாப் மற்றும் டிவி ஆபர்களை பற்றி பார்ப்போம்:

  MSI GF63 15.6-inch கேமிங் லேப்டாப் (ரூ.64,990)

  வழக்கம் போல இந்த பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போதும் எம்எஸ்ஐயின் ஜிஎஃப் 63 கேமிங் லேப்டாப்பின் மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.இது தற்போது ரூ.50,000 என்கிற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது ரூ.64,990 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் எம்ஆர்பி ரூ.1,04,990 ஆகும்.

  எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ.1,000 என்கிற கூடுதல் தள்ளுபடியையும், எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பின் கீழ் ழைய லேப்டாப்பை மாற்றி ரூ.17,650 வரை கூடுதல் தள்ளுபடியையும் ஒருவர் பெறலாம்.

  சாம்சங் 43 இன்ச் 4 கே ஸ்மார்ட் எல்இடி டிவி (ரூ.35,999)

  சாம்சங்கின் 43 இன்ச் 4 கே ஸ்மார்ட் எல்இடி டிவி இந்த வாரம் நடக்கும் பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையின் போது ரூ.35,999 க்கு வாங்க கிடைக்கும். இதன் எம்ஆர்பி ரூ.52,900 ஆகும். பழைய டிவியை எக்ஸ்சேன்ஜ் செய்வதின் மூலம் ரூ.11,000 கூடுதல் உடனடி தள்ளுபடியையும் பெறலாம்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here