எல்லாம் வதந்தியாம்: கமல் அவருடன் கூட்டணி சேரலையாம்

0
12

ஹைலைட்ஸ்:

  • கமலுக்கு வில்லனாகிறாரா ராகவா லாரன்ஸ்?
  • விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லன் ராகவா லாரன்ஸ் இல்லையாம்
  • கமலுக்கு கெத்து வில்லனை தேடி வரும் லோகேஷ் கனகராஜ்

விஜய், விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் எனும் வெற்றிப் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இரண்டு பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளாராம். அதன்படி கமலை வைத்து ஒரு படம் எடுக்கிறார்.

அந்த படத்திற்கு என்று தலைப்பு வைத்து கமலின் பிறந்தநாள் அன்று டீஸர் கூட வெளியிட்டனர். விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக பிரபுதேவா நடிப்பார் என்று முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில் பிரபுதேவா இல்லை மாறாக நடிகரும், டான்ஸ் மாஸ்டரும், இயக்குநருமான தான் கமலுக்கு வில்லன் என்று நேற்றில் இருந்து பேச்சாக உள்ளது.

ராகவா லாரன்ஸ் பெயரை கேட்ட கமல் ரசிகர்களோ, ஆண்டவரே அவர் வேண்டாம் என்றார்கள். முன்னதாக தர்பார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராகவா லாரன்ஸ், தான் சிறுவயதில் தீவிர ரஜினி ரசிகன் என்றும், கமல் பட போஸ்டரில் சாணி அடித்ததாகவும் கூறினார். அவரின் பேச்சை கேட்ட கமல் ரசிகர்கள் கோபம் அடைந்து திட்டினார்கள்.

இதையடுத்து கமலை சந்தித்து விளக்கம் அளித்தார் ராகவா லாரன்ஸ். அதனால் தான் விக்ரம் படத்தில் ராகவா லாரன்ஸ் வேண்டாம் என்றார்கள். இந்நிலையில் லோகேஷுக்கு நெருக்கமானவர்களோ வேறு மாதிரி சொல்கிறார்கள்.

விக்ரம் படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லன் கிடையாது. மலையாளம் அல்லது தெலுங்கு திரையுலகில் இருந்து யாராவது பிரபல நடிகரை அழைத்து வரும் ஐடியாவில் இருக்கிறார் லோகேஷ் என்கிறார்கள். மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி எனும் கெத்து வில்லனை நடிக்க வைத்த லோகேஷ், விக்ரமிலும் மாஸான ஒருவரை வில்லனாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் விக்ரம் பட ஹீரோ கமல் தான், ஆனால் படம் வில்லனுடையது என்று விமர்சனம் வரக் கூடாது என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மாஸ்டர் படத்தை பார்த்தவர்கள் அது விஜய் சேதுபதியின் படம் என்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here