சீன மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளமான வெய்போ வழியாக ஹானர் நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட் பேண்டின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.
மேலும் ஹானர் வெளியிட்ட டீஸரின்படி, அதன் வரவிருக்கும் ஃபிட்னஸ் டிராக்கரில் புல் ஸ்க்ரீன் வடிவமைப்பு இடம்பெறும் என்பதை உறுதி செய்துள்ளது. “புல்-ஸ்க்ரீன் ப்ரெஸ்லெட்ஸ்களின் சகாப்தத்தைத் திறக்கவும் (தோராயமாக சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)” என்ற சொற்றொடரையும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இப்போதைக்கு, ஹானர் பேண்ட் 6-இன் விவரக்குறிப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும் இது அறிமுகமாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஹானர் நிறுவனம் அதன் அம்சங்கள் குறித்த கூடுதல் தகவல்களை எதிர்வரும் நாட்களில் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம், ஹானர் பேண்ட் 5 ஆனது 0.95 இன்ச் அளவிலான AMOLED (240 x 120 பிக்சல்கள்) கலர் டிஸ்ப்ளேவை 282 பிபிஐ மற்றும் 2.5 டி கிளாஸுடன் வருகிறது. இந்த பிட்னஸ் டிராக்கர் Android மற்றும் iOS இயங்கும் சாதனங்களுடன் இணக்கமானது. மேலும் இது சாதாரண பயன்பாட்டு நிலையில் 14 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்க வல்லதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஹானர் பேண்ட் 5-இல் ப்ளட் ஆக்ஸிஜன் நிலை சென்சார் உள்ளது, இதனால் உங்கள் இரத்தத்தின் ஸ்பிஓ2 லெவலை அளவிட முடியும், இது உங்கள் இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவைக் குறிக்கிறது.
மேலும் இந்த ஸ்மார்ட் பேண்டால் ஸ்டெப்ஸ் கவுண்ட், டிஸ்டன்ஸ் கவர்டு, கலோரி பர்ன்டு, ஆட்டோமெட்டிக் எக்ஸசைஸ் ரிகக்னைஷேஷன் மற்றும் பல போன்ற 10 வெவ்வேறு உடற்பயிற்சி நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியும்.