ஐயங்கார் ஸ்டைலில் புளியோதரை செய்வது எப்படி?

0
26

 • 25mTotal Time
 • 15mPrep Time
 • 268Calories
(Serving: 2)

முக்கிய பொருட்கள்

 • தேவையான அளவு நனைத்து புளி

பிரதான உணவு

 • 14 Numbers மிளகாய்வற்றல்
 • 2 தேக்கரண்டி எள் விதை
 • 2 தேக்கரண்டி கடலை பருப்பு
 • 2 தேக்கரண்டி உளுந்து பருப்பு
 • 3 தேக்கரண்டி கொத்தமல்லி விதை
 • 1/2 தேக்கரண்டி மிளகு
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1/2 தேக்கரண்டி கடுகு விதைகள்
 • 1/2 தேக்கரண்டி வெந்தய விதைகள்
 • தேவையான அளவு பெருங்காயம்
 • தேவையான அளவு மஞ்சள்
 • 1 கப் தேங்காய்
 • தேவையான அளவு கறிவேப்பிலை
 • தேவையான அளவு வெல்லம்
 • 1 கைப்பிடியளவு பச்சை வேர்க்கடலை
 • தேவையான அளவு உப்பு

வெப்பநிலைக்கேற்ப

 • தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்

How to make: ஐயங்கார் ஸ்டைலில் புளியோதரை செய்வது எப்படி?

Step 1:

முதலில் ஒரு கடாயை எடுத்து அதில் எள் விதைகளை போட்டு நன்கு உலர வைக்க வேண்டும். பின்பு சிவப்பு மிளகாய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, ஜீரா, கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து 4 முதல் 5 நிமிடங்கள் எண்ணெய் இல்லாமல் மிதமான தீயில் வறுக்கவும்.

புளியோதரை மசாலா செய்வது எப்படி?

Step 2:

கோவில் திருவிழாக்களில் பிரதான உணவாக புளியோதரை மாறியுள்ளது. மேலும் புளியோதரை எளிதில் கெட்டு போகாது. எனவே நெடுந்தூரம் பயணம் மேற்கொள்பவர்கள் கட்டு சோறாக புளியோதரையை பயன்படுத்துகின்றனர்.

New Project (1)

Step 3:

பிறகு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டுக்கொள்ளவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மற்றும் நிலக்கடலையை சேர்த்து எண்ணெயில் சிவக்கும் வரை வறுக்கவும். பின்பு அதில் மஞ்சள் தூள், கறிவேப்பிலை மற்றும் சிவப்பு மிளகாயை சேர்க்கவும். இவை மூன்றும் புளியோதரையின் வாசத்திற்காகவும் நிறத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது.

New Project (4)

Step 4:

பிறகு உலர்ந்த தேங்காயை தனியாக சிறிது வறுக்கவும். அவற்றை ஒரு பாத்திரத்தில் தனியாக வைக்கவும். அதே கடாயில் முதல்நாள் ஊற வைத்த புளியின் சாறை ஊற்றி மிதமான தீயில் 4 முதல் 5 நிமிடங்கள் வரை சமைக்கவும். பிறகு கடாயில் சிறிது வெல்லம் மற்றும் பெருங்காயத்துளை சேர்த்து 4 முதல் 5 நிமிடங்கள் சமைக்கவும்.

New Project (7)

Step 5:

பிறகு இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இப்போது முன்பு வறுத்து வைத்திருந்த கலவையையும் புளி சாறுடன் சேர்த்துக்கொள்ளவும். அதோடு சாதத்தையும் அரைத்த கலவையையும் சேர்க்கவும். அனைத்தையும் கிளறவும்.

New Project (8)

Step 6:

இப்போது சுவையான ஐயங்கார் வீட்டு புளியோதரை தயார். சாதத்தை சேர்க்காமல் கலவையை மட்டும் தனியாக 3 முதல் 4 மாதங்கள் வரை வைத்திருக்கலாம். கெட்டு போகாது. ஆனால் கை படாமல் கலவையை செய்ய வேண்டும். இல்லை என்றால் கலவை கெட்டு போவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

New Project (9)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here