நீரிழிவு நோயிலிருந்து நம்முடைய சிறுநீரகங்களைப் பாதுகாப்பது எப்படி?

0
11

சிறுநீரக பாதிப்பு என்பது நீரிழிவு நோயின் காரணமாக ஏற்படும் மிகப்பெரும் பக்கவிளைவாகும். எனவே நமது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக பேணி காப்பது அவசியம். முக்கியமாக சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு இது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது. நீரிழிவு நோய் பிரச்சினை உள்ளவர்கள் துரிதமாக செயல்பட்டு அவர்களது சிறுநீரகங்களை பாதுகாப்பது அவசியம். சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை குறைத்துக் கொள்வது, மேலும் இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க தவறாமல் உடற்பயிற்சி செய்வது போன்றவையாகும்.

​நீரிழிவு நோய்

நீரிழிவு என்பது உயர் ரத்த சர்க்கரையை விட அதிகமாக இருக்கும். கழிவுகளை உடலில் இருந்து நீக்குவதற்கு சிறுநீரகங்கள் பயன்படுகின்றன. கழிவுகளை வடிகட்டி ரத்தத்தில் இருந்து அகற்றுவது சிறுநீரகத்தின் முக்கிய பணி. நீரிழிவு நோய் ஏற்படும்போது அது சிறுநீரகங்களை எதிர்மறையாக பாதித்து, சிறுநீரகத்தின் அன்றாட செயல்பாடுகளையும் பாதிக்கிறது. இது சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இதனை சரியாக கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால், இது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

​நீரிழிவு நோய் சிறுநீரகங்களை எவ்வாறு பாதிக்கிறது?

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. ரத்தத்தில் கூடுதல் சர்க்கரை இருப்பதால் சிறுநீரகங்கள் ரத்தத்திலிருந்து சர்க்கரையை வடிகட்ட அதிக நேரம் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. இது சிறுநீரகங்களை சேதப்படுத்தி உயர் ரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்க காரணமாகிறது. சிறுநீரில் அதிக புரதம் கசிவதால் சிறுநீரகம் வெகுவிரைவில் சேதமடைகிறது.

​சிறுநீரக பாதிப்பை கண்டறிவது எப்படி?

சிறுநீரகம் முழுமையாக அதன் செயல்பாட்டை நிறுத்தும் வரை நமக்கு அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை. சிறுநீரக பாதிப்பு ஏற்படும்போது தென்படும் சில அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

உடலில் திரவங்களின் குவிப்பு: கணுக்கால் வீக்கம், எடை அதிகரிப்பு அல்லது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் போன்றவை சிறுநீரகத்தில் பிரச்சனை இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள்.

தூக்கம் மற்றும் பசியின்மை: ஒருவருக்கு தூக்கம் அல்லது கவனச்சிதறல், பசியின்மை வயிற்றுவலி போன்றவை ஏற்பட்டால் அவையும் ஒரு சில அறிகுறிகள் ஆகும்.

சோர்வு: சோர்வு, குமட்டல், வாந்தி போன்றவை சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

அரிப்பு: சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்களுக்கு தொடர்ந்து அரிப்பும் ஏற்படக் கூடும்.

மூச்சுத் திணறல். மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் தென்பட்டால் அவை சாதாரண அறிகுறிகள் அல்ல. மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். சிறுநீரக நோயை தடுக்க உதவும் சில வழிகள் பற்றி தெரிந்து கொள்வோம்

​சர்க்கரை

டைப் 2 நீரிழிவு நோயை கண்டறிய, மூன்று மாதங்களுக்கு மேலாக ரத்தத்தில் சர்க்கரை அல்லது குளுக்கோஸ் அளவை அளவிடும் பரிசோதனையை மேற்கொள்ளலாம். சர்க்கரையின் அளவை சரிபார்த்து சரியான மருந்துகளை உட்கொள்வதன் மூலமும், ஆரோக்கிய உணவு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றின் மூலமும் சிறுநீரக பிரச்சினை ஏற்படாமல் தடுக்கலாம்.

​ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த

உயர் ரத்த அழுத்தம் இதய பாதிப்பு மற்றும் பக்கவாதம், சிறுநீரக நோய் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இரத்த குளுக்கோஸ் அளவை போலவே, நீரிழிவு நோயாளிகள் இரத்த அழுத்த அளவை பராமரிப்பது அவசியம். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை சரியான முறையில் உட்கொண்டு வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் சிறுநீரக பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

​உணவு

உயர் ரத்த சர்க்கரை காரணமாக சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். அதிக சர்க்கரை,கலோரி, அதிக உப்பு இல்லாத உணவுகளை உண்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறைந்த கலோரி உணவுகளை உட்கொள்ளும் போது, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற பழங்கள், தானியங்கள், காய்கறிகள் மற்றும் மீன்கள் போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். உடல் எடையை பராமரிப்பது ஆரோக்கியமான சிறுநீரகங்களை பராமரிக்க உதவுகிறது.

​புகை பிடித்தல்

புகைபிடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. இது நமது உடலில் ரத்த க்ளூகோஸ் அளவைக் கட்டுப்படுத்தும் செயல்பாட்டை கடினமாக்குகிறது.

​உடற்பயிற்சி

ஓட்டம், விறுவிறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், ஜாகிங், நடனம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். தினசரி குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.

​மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுதல்

உங்கள் இரத்த சர்க்கரை அளவு சரியான விகிதத்தில் இருந்தாலும், தொடர்ந்து மருந்துகளை உட்கொள்வது அவசியம். ஏனெனில் அவை சர்க்கரை அளவை பராமரிக்க உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here