பட்ஜெட் விலையில் iQOO U3 ஸ்மார்ட்போன் அறிமுகம்; அப்படி என்ன விலை?

  0
  6

  iQOO நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, 48 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் டைமன்சிட்டி 800 யு மொபைல் இயங்குதளம் மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.

  iQOO U3 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்:

  iQOO U3 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.16,840 க்கும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது தோராயமாக ரூ.19,100 க்கும் அறிமுகமாகி உள்ளது. இந்த லேட்டஸ்ட் ஐக்யூ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் க்ளோ ப்ளூ வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கிறது.

  iQOO U3 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

  iQOO U3 ஸ்மார்ட்போன் ஆனது 6.58 இன்ச் அளவிலான புல் எச்டி + டிஸ்ப்ளேவை, 1080 x 2408 பிக்சல்கள் என்கிற ரெசல்யூஷன் மற்றும் 20.07: 9 என்கிற அளவிலான திரை விகிதம், 90.61 சதவீதம் என்கிற அளவிலான ஸ்க்ரீன் டூ பாடி விகிதம், 401 பிபி பிக்சல் அடர்த்தி, எச்டிஆர் 10 மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

  இந்த ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 800 யூ ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதில் எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜிற்கான ஆதரவு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

  கேமராக்களைப் பொறுத்தவரை, பின்புற பேனலில் டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 48 மெகாபிக்சல் மெயின் கேமரா (எஃப் / 1.79 லென்ஸ்) + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. முன்பக்கத்தைப் பொறுத்தவரை, எஃப் / 2.0 லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்சல் சென்சார் உள்ளது, இது வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பில் வைக்கப்பட்டுள்ளது.

  iQOO U3 ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 18W டூயல் எஞ்சின் ஃபிளாஷ் சார்ஜு உடன் வருகிறது. செக்யூரிட்டிக்காக இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் பேஸ் அன்லாக்கையும் ஆதரிக்கிறது.

  இந்த ஸ்மார்ட்போன் iQOO UI 1.5 உடனாக Android 10 இயக்க முறைமையில் இயங்குகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, டூயல் 4G VoLTE, Wi-Fi 6 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.0, GPS / GLONASS, மைக்ரோ யூ.எஸ்.பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றை கொண்டுள்ளது. அளவீட்டில் இது 164.15 x 75.35 x 8.4 மிமீ மற்றும் 185.5 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here