விறைப்பு நிலையிலும் ஆண்குறி வளைந்து காணப்படுகிறதா? இது நார்மலா? ஏதேனும் நோயின் அறிகுறியா?

0
30

ஆண்களின் ஆண்குறி குறித்து பல பொதுவான கருத்துக்கள் நிலவி வருகின்றன. அவற்றின் அமைப்பு, தோற்றம் மற்றும் செயல் குறித்து எப்போதும் ஆண்களுக்கு கவலை இருப்பது உண்டு. ஆண்குறி நிமிர்ந்து நிற்கும்போது இடது அல்லது வலது பக்கம் சற்று வளைவது பொதுவானது. ஆனால் உங்கள் ஆண்குறியில் மிகவும் குறிப்பிடத்தக்க வளைவு இருந்தால், அது உங்களுக்கு வலி அல்லது உடலுறவில் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். அந்த மாதிரியான பிரச்சனைகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது. ஏனெனில் இது சில நேரம் பெய்ரோனியின் நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். இந்த நோயைப் பற்றி விரிவாக காண்போம்.

​பெய்ரோனியின் நோய்

பெய்ரோனியின் நோய் என்பது ஆண்குறி நிமிர்ந்து நிற்கும்போது வளைந்திருக்கும் அசாதாரண நோய் ஆகும். இந்த நிலை பெரும்பாலும் 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களைப் பாதிக்கிறது, இருப்பினும் இது எந்த வயதிலும் நிகழலாம்.எனவே உங்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

​அறிகுறிகள்

ஆண்குறியின் தண்டில் ஒரு தடிமனான பகுதி அல்லது கடினமான கட்டை போன்று இருக்கும்.

ஆண்குறி நிமிர்ந்து நிற்கும் போது மேல்நோக்கி வளைவு காணப்படுதல்.

ஆண்குறியில் வலி உண்டாதல்

​ஆண்குறி அசாதாரணமாக காணப்படுதல்

ஆண்குறியின் நீளம் மற்றும் சுற்றளவு இழப்பு ஏற்படுதல்

இந்த அறிகுறிகளால் ஆண்குறியில் வலி உண்டாகிறது. எனவே உங்க ஆண்குறி அசாதாரணமானதாக காணப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள்.

கடுமையான ஆண்குறி வளைவு உடலுறுவின் போது வேதனை அளிக்க வாய்ப்பு உள்ளது. பெய்ரோனியின் நோய் விறைப்புத் தன்மைக்கு வழி வகுக்கும்.

​பெய்ரோனியின் நோய் ஏற்பட காரணங்கள்

ஆண்குறியில் ஏற்படும் காயங்களால் இந்த மாதிரியான பிரச்சனை உண்டாகலாம்.

வெளிப்படையான காரணங்கள் இல்லாமலும் இந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்படலாம்.

குடும்ப வரலாறும் காரணமாக அமையலாம்.

​அறுவை சிகிச்சை இல்லாத சிகிச்சை முறைகள்

இந்த நிலையை சரி செய்ய பல ஆண்களுக்கு சிகிச்சைகள் தேவைப்படுவதில்லை. நாள்பட்ட வலி இருந்தால் மட்டுமே சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் பாலியல் வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தினால் மருத்துவரை அணுகுங்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிக்கு மருந்துகள் மற்றும் ஊக்க மருந்துகளை செலுத்துதல் மூலம் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. எக்ஸ்ட்ரா கோர்போரல் ஷாக்வேவ் தெரபி (ESWT) போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது.

இதில் அல்ட்ரா சவுண்ட் ஒலி அலைகளை அனுப்பி பரிசோதனை செய்யப்படுகிறது. இருப்பினும் இந்த முறை சிறந்தது பாதுகாப்பானது என்பதற்கு போதுமான சான்றுகள் இல்லை.

​பெய்ரோனிநோய் அறுவை சிகிச்சை

கடுமையான சந்தர்ப்பங்களில், பெய்ரோனியின் நோய்க்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்க முடியும். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிறகு குறைந்தது 12 மாதங்கள் காத்திருக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கீழ்க்கண்ட அறுவை சிகிச்சைகள் இதில் அடங்கும்

ஆண்குறியை நேராக்க பிளேக்கை அகற்றுதல் அல்லது வெட்டுதல் மற்றும் தோல் அல்லது ஒரு நரம்பு ஆகியவற்றை இணைத்தல்.

வளைவை நீக்க பிளேக்கிற்கு எதிரே உள்ள ஆண்குறியின் ஒரு பகுதியை அகற்றுதல் (இது ஆண்குறியின் சிறிது சுருக்கத்திற்கு வழிவகுக்கும்)

ஆண்குறியை நேராக்க ஒரு சாதனத்தை பொருத்துதல்.

​மருத்துவ ஆலோசனை

வளைந்த ஆண்குறி இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பமும் தயக்கமும் நிறைய பேருக்கு இருக்கும். அப்படி இருப்பவர்கள், அவ்வாறுஆண்குறி வளைந்தோ அல்லது உடலுறவில் சிக்கலை ஏற்படுத்துகிறது என்றால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை செய்வது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here