அனுபமா இல்லை சஞ்சனா கணேசனை திருமணம் செய்யும் பும்ரா?

0
12
ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனுக்கும் கோவாவில் திருமணம் நடைபெறப் போகிறதாம்.

பும்ரா

கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். தனக்கு திருமணம் நடக்கவிருப்பதாக அவர் பிசிசிஐயிடம் கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் எனக்கு ஹாலிடே என்று நடிகை அனுபமா பரமேஸ்வரன் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார். அதை பார்த்தவர்கள் பும்ராவுக்கும், அனுபமா பரமேஸ்வரனுக்கும் தான் திருமணம் என்று பேசத் துவங்கினார்கள். இதை பும்ரா கண்டுகொள்ளவே இல்லை.

அனுபமா

பும்ராவுக்கும், அனுபமாவுக்கும் இடையே காதல் என்று ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்ட நிலையில் திருமண பேச்சு கிளம்பியது. இது குறித்து அனுபமாவின் அம்மா மலையாள ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, என் மகள் பும்ராவை திருமணம் செய்வதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அனுபமா தற்போது குஜராத்தில் படப்பிடிப்பில் இருக்கிறார். அவரை பற்றி தேவையில்லாத பேச்சு கிளம்பியிருக்கிறது என்றார்.

சஞ்சனா

பும்ரா அனுபமாவை இல்லை மாறாக சஞ்சனா கணேசனை திருமணம் செய்யப் போகிறார் என்று தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. அது யாரு சஞ்சனா கணேசன் என்று கேட்கிறீர்களா?. 2014ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு பைனலிஸ்டான சஞ்சனா விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் ஆவார். அவருக்கும், பும்ராவுக்கும் வரும் 14, 15 ஆகிய தேதிகளில் கோவாவில் திருமணம் நடக்கவிருக்கிறதாம்.

காதலா?

சஞ்சனாவை திருமணம் செய்யப் போகிறார் என்றால் அனுபமா பெயர் ஏன் அடிபட்டது என்று நினைக்காலம். இன்ஸ்டாகிராமில் பும்ரா பின்தொடரும் ஒரே தென்னிந்திய நடிகை அனுபமா தான். மேலும் அனுபமா போட்ட சில ட்வீட்டுகள் பும்ராவின் ட்வீட்டுகளுக்கு பதில் அளிப்பது போன்று இருந்தது. அதனால் தான் அவர்களுக்கு இடையே காதல் என்றே பேச்சு கிளம்பியது. 28 வயதாகும் சஞ்சனா எம்டிவி ஸ்ப்லிட்ஸ்வில்லா 7 நிகழ்ச்சி மூலம் தான் கெரியரை துவங்கினார். ஆனால் காயம் காரணமாக அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here