”அதிமுகவில் இருந்துகொண்டு சசிகலாவுக்கு ஜால்ரா”, ராஜேந்திர பாலாஜிக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை..!

0
3
அதிமுக கட்சியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு வந்த நிலையில், அமைச்சர்களின் கூட்டமைப்பால் அது சாந்தமானது. மேலும், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தது, தடுமாறும் கப்பலில் நங்கூரம் போட்டதாக பார்க்கப்பட்டது.

ஆனால், பால்வளத்துறை அமைச்சர் கூறி வரும் கருத்துக்களும், அவருக்கு எதிராக அதிமுக நிர்வாகிகள் கடிந்துகொள்வதும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில், மற்றும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர் , கோகுல இந்திராவும் கருத்து தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

அதனை மீன்வளத்துறை அமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார். அதுகுறித்து ஜெயக்குமார் அளித்த பேட்டியில், இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நின்ற அமமுகவினர் நமக்கு தம்பியா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவதை எல்லாம் கட்சி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

அதிமுகவில் இருந்துகொண்டு சசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தெரிவித்த கருத்து, சசிகலாவின் அரசியல் வருகை தொடர்பானது அல்ல” என இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here