2021-இல் 3GB டெய்லி டேட்டாவை வழங்கும் ஜியோ திட்டங்களின் லிஸ்ட் இதோ!

  0
  12

  2016 செப்டம்பர் 5 ஆம் தேதி ஜியோவின் அறிமுகத்தின் போது “ஆரம்பத்துல FREE DATA கொடுத்து நம்மள பழக்கி விட்டுட்டு… கொஞ்ச மாசம் கழிச்சு மொத்தமா வசூல் பண்ணபோறான் பாரு!” என்று விமர்சனம் செய்யாத ஆளே இல்லை எனலாம்.

  “FREE யா வர்ற வரைக்கும் யூஸ் பண்ணுவேன்; அப்புறம் சிம் கார்டை உடைச்சி போட்ருவேன்” என்று கொக்கரித்தவர்களையும் கூட பார்த்திருப்போம். ஆனால் உண்மை என்னவென்றால முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான டெலிகாம் நிறுவனம் பெரிய அளவிலான புதுமைகளைச் செய்ய முயற்சித்தது.

  இன்னும் சொல்லப்போனால் ரிலையன்ஸ் ஜியோவின் விளைவாகவே இந்தியாவில் உள்ள மொபைல் போன் சந்தாதாரர்கள் தினசரி டேட்டாத் திட்டங்களைப் பெறத் தொடங்கினர். ரிலையன்ஸ் ஜியோவின் போட்டித்தன்மை காரணமாக “ஏதிராளிகளான” பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவைகள் நாடு முழுவதும் 4ஜி சேவைகளை மேம்படுத்துவதில் தங்களால் முடிந்ததைச் செய்தன.

  30 நாடளுக்கு 300எம்பி பயன்படுத்திய நம் தினமும் 1ஜிபி டேட்டா பற்றாமல் 2ஜிபி டேட்டா திட்டங்களை தேட தொடங்கினோம். இதன் விளைவாகவே ஜியோ தினமும் 5ஜிபி வரையிலான டெய்லி டேட்டா நன்மையை வழங்கியது.

  ஆனால் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் அறிவிக்கப்பட்ட விலையேற்றம் காரணமாக ஜியோ அதன் 5 ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டங்களை நிறுத்திக் கொண்டது. அதன் பிறகு ஒரு நாளைக்கு ஜியோ வழங்கும் அதிகபட்ச டேட்டா நன்மை 3 ஜிபி ஆகும். இப்படியாக 3ஜிபி டெய்லி டேட்டாவை வழங்கும் மூன்று திட்டங்களை ஜியோ கொண்டுள்ளது. அவைகளின் விலை நிர்ணயம் என்ன? அவைகள் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? என்பதை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.

  ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்:

  ரூ.349 ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் மொபைல் ஃபோன் திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. அதாவது மொத்தம் 84 ஜிபி அளவிலான டேட்டா நன்மையை வழங்கும்.

  தினசரி டேட்டா வரம்பு காலாவதியான பிறகு பயனர்கள் 64 கே.பி.பி.எஸ் என்கிற இணைய வேகத்தைப் பெறுவார்கள் என்று ஜியோ கூறுகிறது. ஆம் இதுவொரு வரம்பற்ற காம்போ ப்ரீபெய்ட் திட்டமாகும்.

  அதாவது டேட்டா நன்மைகளை தவிரத்து இது வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது. உடன் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா போன்ற ஜியோ ஆப்களுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது.

  ஒப்பிடுகையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.398 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்கை கொண்டுள்ளது, இது ஒரு நாளைக்கு அதே 3 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. எப்படி பார்த்தாலும், நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டருடன் ஒப்பிடும்போது “இந்த இடத்தில்” ஜியோ முன்னிலை வகிக்கிறது.

  ஜியோ ரூ.401 ப்ரீபெய்ட் திட்டம்:

  இந்த பட்டியலில் இரண்டாவதாக உள்ள திட்டம் மிகவும் பிரபலமான ரூ.401 பிளான் ஆகும். இது ஐபிஎல் 2020 க்கு முன்னதாக செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி அளவிலான டேட்டாவுடன் வருகிறது. ஆகமொத்தம் இதன் முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் 84 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

  இந்த திட்டம் கூடுதலாக 6 ஜிபி டேட்டா நன்மையுடனும் வருகிறது, எனவே இதன் ஒட்டுமொத்த டேட்டா நன்மை 90 ஜிபி ஆக மாறுகிறது.

  டேட்டா நன்மையை தவிர்த்து இது வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.

  தவிர ரூ.401 மதிப்புள்ள ஜியோ திட்டத்தின் முக்கியமான நன்மை என்னவென்றால் இதனுடன் தொகுக்கப்பட்ட டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவே ஆகும். ஆம் வெறும் ரூ.401 க்கு, ஜியோ நிறுவனம் ரூ.399 மதிப்புள்ள இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை வழங்குகிறது.

  ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்:

  பட்டியலில் கடைசியாக உள்ளது ரிலையன்ஸ் ஜியோவிடம் இருந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.999 ப்ரீபெய்ட் மொபைல் திட்டமாகும். இது ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவுடன் 84 நாட்கள் என்கிற செல்லுபடியுடன் வருகிறது. இதன் மொத்த டேட்டா நன்மை 252 ஜிபி ஆகும்.

  டேட்டா நன்மையை தவிர்த்து, இந்த ரீசார்ஜ் வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல் ஆகியவைகளையும் வழங்குகிறது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here