சாக்ரடீஸை திருமணம் செய்தது ஏன்?: உண்மையை சொன்ன கயல் ஆனந்தி

0
15

ஹைலைட்ஸ்:

  • திருமணம் குறித்து மனம் திறந்த கயல் ஆனந்தி
  • சாக்ரடீஸை மணந்தது ஏன்?: கயல் ஆனந்தி

கயல் ஆனந்திக்கும், விஜய் ஆண்டனி, அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள அக்னிச் சிறகுகள் படத்தின் இணை இயக்குநரான சாக்ரடீஸுக்கும் கடந்த 7ம் தேதி தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலானது. அதை பார்த்த பலரும், என்ன இந்த ஆனந்தி இப்படி திடீர்னு திருமணம் செய்து கொண்டாரே என்றார்கள். பிரபலமான நடிகையாக இருந்து கொண்டு யாருக்கும் சொல்லாமல் இப்படி செய்துவிட்டாரே என்று விமர்சனம் எழுந்தது.

பரியேறும் பெருமாள் படத்தை அடுத்து மீண்டும் கதிர் ஜோடியாக நடிக்கவிருக்கிறார் . அவரை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்தவர்களோ திருமண புகைப்படத்தை பார்த்து கலக்கம் அடைந்தனர்.

கயல் ஆனந்தியின் கணவர் யார் என்று கூகுள் செய்யத் துவங்கினார்கள் ரசிகர்கள். மூடர் கூடம் படம் புகழ் இயக்குநர் நவீனின் மைத்துனர் தான் இந்த சாக்ரடீஸ். தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடித்த அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் ஆனந்தி ஹீரோயினாக நடித்திருந்தார்.

அந்த படத்தில் சாக்ரடீஸ் இணை இயக்குநராக பணியாற்றினார். அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் நடித்தபோது தான் ஆனந்திக்கும், சாக்ரடீஸுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. காதல் வலுவான பிறகு பெற்றோரிடம் கூறி சம்மதம் வாங்கி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தன் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு ஆனந்தி கூறியிருப்பதாவது,

உங்கள் வாழ்வின் எஞ்சிய நாட்களை நீங்கள் விரும்பும் ஒருவருடன் இருக்க முடிவு செய்துவிட்டால், அந்த எஞ்சிய நாட்கள் விரைவில் துவங்க வேண்டும் என்று விரும்புவீர்கள்.

பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் தெரிந்து கொண்டு, கடினமான சூழல்களை சேர்ந்தே கடந்து வந்த பிறகு, ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தால் இந்த உலகையே வெல்லலாம் என்பதை உணர்ந்தோம். என் குடும்பத்தார், நண்பர்கள் முன்னிலையில் கடந்த 7ம் தேதி மிஸ்டர் சாக்ரடீஸை திருமணம் செய்து கொண்டேன் என்பதை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனவர்களை மிஸ் செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here