போக்பா வெறித்தனம்: முதலிடத்திற்கு முன்னேறியது மான்செஸ்டர் யுனைடெட்!

0
3

புள்ளி பட்டியலில் ஒரு ஆட்டம் குறைவாக ஆடி லிவர்பூல் அணியுடன் சமமாக இருந்த யுனைடெட் அணி இன்று அதிகாலையில் அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தை வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு அமைந்தது. பர்ன்லி அணியை அதன் சொந்த ஊரில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல, பொதுவாக பெரிய அணிகள் பர்ன்லியுடன் பெரியளவில் புள்ளிகளை இழக்கும்.

தொடக்கம் முதல் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த மான்செஸ்டர் யுனைடெட் அணியால் கோல் அடிக்க சரியான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியாமல் போனது. பர்ன்லியின் தடுப்பாட்டதை துளைத்து செல்ல இயலாத சமயத்தில், லுக் ஷா கொடுத்த கிராஸ்சை அணியின் கேப்டன் ஹாரி மகுவையர் தலையால் முட்டி கோல் ஆக்க மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் கொண்டாட தொடங்கினர் ஆனால் பவுல் காரணமாக அந்த கோல் கொடுக்கப்படவில்லை. இதனால் முதல் பாதி 0-0 என்ற கோல் கணக்கில் முடிந்தது.

இரண்டாம் பாதி துவக்கத்திலிருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணி வாய்ப்புகளை உருவாக்க அதை கோலாக மாற்ற முடியாமல் தடுமாறினர். அணியின் தாக்குதல் ஆட்டக்காரர்களான கவானியும் மார்சியலும் கிடைத்த நல்ல வாய்ப்புகளை நழுவவிட, அணியின் நட்சத்திர வீரர் புருனோ தூரத்திலிருந்து மாறி மாறி கோலை நோக்கி ஷாட் அடிக்க ஒன்றும் கோலாக மாற்றப்படாமல் இருந்தது. ஆட்டம் 0-0 என்ற முடிவை நோக்கி செல்ல, ஆட்டத்தை தன் கைகளில் எடுத்த போக்பா, ராஷ்போர்ட் கொடுத்த கிராஸ்சை அட்டகாசமாக வாலி அடித்து கோலாக மாற்றினார்.

ஆட்டம் முழுவதும் அற்புதமாக ஆடிய போக்பாவிர்க்கு இந்த கோல் ஒரு பரிசாக அமைந்தது. அதன் பின் பெரிய அளவில் எவரும் தாக்குதலில் ஈடுபடவில்லை இதனால் ஆட்டம் 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு வெற்றியாக முடிந்தது.

வருகின்ற 17ஆம் தேதி இரண்டாம் இடத்தில் இருக்கும் லிவர்பூலுடனான ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் முதலிடத்திற்கு முன்னேறுவார்கள், எனவே அந்த ஆட்டத்தில் கடுமையான போட்டி நிலவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here