விஜய்கிட்டேயேவா, அவர் தான் கில்லியாச்சே: தெறிக்கவிட்டுடாருல

0
2

ஹைலைட்ஸ்:

  • மாஸ்டர் ப்ரொமோ வீடியோவில் மாஸ் காட்டும் விஜய்
  • விஜய்கிட்டப் போய் கபடி பத்தி கேட்கலாமா பாஸு?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், , மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக நாளை தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் ரிலீஸ் குறித்த புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

மாஸ்டர் ரிலீஸையொட்டி ரசிகர்களை சந்தோஷப்படுத்த தினமும் மாலை 6 மணிக்கு ப்ரொமோ வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் புது போஸ்டரை வெளியிட்டு விளையாட்டுனாலே அண்ணா கிங் டா. இன்னைக்கு 5 மணிக்கு ஒரு தரமான ப்ரொமோ காத்திருக்கு, தொடர்ந்து கணியுங்கள் என்று தயாரிப்பு தரப்பு ட்வீட் செய்தது.
அந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், மாஸ்டர் படக் காட்சிகளை லீக் செய்த ஆசாமிக்கு நெத்தியடி கொடுக்கும் வகையில் ப்ரொமோ இருக்கப் போகிறது என்று தெரிவித்தனர். இந்நிலையில் அறிவித்தபடி ப்ரொமோ வீடியோவை வெியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் கபடி ஆடியுள்ளார். கபடியில் கில்லியான விஜய்யை பார்த்து என்ன வாத்தி, இந்த விளையாட்டோட பேராவது தெரியுமா என்று கேட்க, அவரோ தன் மொத்த வித்தையையும் காட்டி அனைவரையும் பந்தாடுகிறார். இப்படி ஒரு வீடியோவை தான் எதிர்பார்த்தோம் என ரசிகர்கள் செம குஷியாகியுள்ளனர்.

மாஸ்டர் படம் நாளை ரிலீஸாகவிருக்கும் நேரத்தில் அதன் காட்சிகளை ஒருவர் ஆன்லைனில் கசியவிட்டுள்ளார். படத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க ஒரு பிரபல டிஜிட்டல் நிறுவனத்திடம் கொடுத்தனர். அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் தான் காட்சிகளை கசியவிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

மாஸ்டர் படக் காட்சிகளை கசியவிட்டவர் என்று கூறி ஒரு வாலிபரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர் விஜய் ரசிகர்கள். அவரை நேரில் பார்த்து பொங்கல் பரிசு கொடுக்க ஆவலாக இருக்கிறோம், முகவரி கிடைக்குமா என ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

இதற்கிடையே லீக்கான வீடியோவை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என்று மாஸ்டர் படக்குழு, திரையுலகினர், பிற நடிகர்களின் ரசிகர்கள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here