இந்நிலையில், கொலை செய்த குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும், சிபிஐ விசாரணை கோரியும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சலூன் கடைகளை மூடி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் , ” சிறுமியின் தீர்ப்பை தமிழக அரசு ஆராய்ந்து மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டில் தனியாக இருந்த அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் செலுத்தி கொலைசெய்த என்பவர் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அவரை திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் விடுவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.