தந்தையின் சமாதியில் அஞ்சலி செலுத்திய சிராஜ்!

0
8

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் , ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் பங்கேற்பதற்காக சிட்னி சென்று தனிமை முகாமில் இருந்தார். அந்த சமயத்தில் பெங்களூருவில் இருந்த அவரது தந்தை காலமானார். இதனால், சிராஜ் நாடு திரும்ப பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், அவர் நாடு திரும்பச் சம்மதிக்கவில்லை. இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடி, வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்பதுதான் தனது தந்தையின் லட்சியம். அதை நிறைவேற்றுவதுதான் கடமை எனத் தெரிவித்து நாடு திரும்பாமல் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டார்.

சிராஜிற்கு முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போட்டியில் முகமது ஷமி காயத்தால் அவதிப்பட்டதால் இரண்டாவது டெஸ்டில் சிராஜ் களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சிறப்பான பந்துவீச்சு மூலம் மூன்றாவது, நான்காவது டெஸ்டிலும் இடம் பிடித்தார். குறிப்பாக, தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் நான்காவது டெஸ்டில் வேகப்பந்துவீச்சுத் துறைக்குத் தலைமை ஏற்று வழி நடத்தி, கடைசி இன்னிங்ஸில் 5 விக்கெட்களை கைப்பற்றி இந்திய அணிக்கு வெற்றியையும் தேடிந்தந்து தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றினார்.

தந்தையின் ஆசையை நிறைவேற்றிய சிராஜிற்கு இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துச் செய்திகள் குவிந்தன. தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி தற்போது நாடு திரும்பியுள்ளது. சிராஜ் முதலில் வீட்டிற்குச் செல்லாமல் விமான நிலையத்திலிருந்து நேரடியாகத் தந்தையின் சமாதிக்குச் சென்று மலர் தூவி கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தினார்.

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை

என்னோற்றான் கொல்எனும் சொல்

விளக்கம்: மகன் தன் தந்தைக்குச் செய்யதக்கக் கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ? எனப் பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

இந்த குறளுக்கு ஏற்ப முகமது சிராஜ், தனது தந்தைக்கு இந்திய டெஸ்ட் வெற்றியைக் கைம்மாறாக அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here