ஸ்டைலஸ் சப்போர்ட் உடன் கலக்கும் புதிய Moto G மாடல்; எப்போது அறிமுகம்?

  0
  4

  2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அல்லது இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த பிப்ரவரியில், மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி ஸ்டைலஸ் எனப்படும் ஸ்மார்ட்போனை ஸ்டைலஸ் ஆதரவுடன் அறிமுகப்படுத்தியது. இப்போது, இந்நிறுவனம் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் “வாரிசு” மீது வேலை செய்வதாக தெரிகிறது

  அது மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 என அழைக்கப்படும் என்றும், இது மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனின் வாரிசாக, அதாவது மேம்படுத்தப்பட்ட பதிப்பாக அறிமுகமாகும் என்றும் பிரபல டிப்ஸ்டர் இவான் பிளாஸிடமிருந்து ஒரு அறிக்கை வந்துள்ளது, இதற்கு ஆதாரமாக XT2115 என்றும் மாடல் நம்பர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 என்பது தான் வரவிருக்கும் மோட்டோ ஸ்மார்ட்போனின் உண்மையான பெயரா என்பதில் இன்னும் உறுதியில்லை என்றாலும் கூட இந்த ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்களை இவான் பிளாஸ் பகிர்ந்துள்ளார்.

  அதன்படி, மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 ஸ்மார்ட்போன் 6.81 இன்ச் அளவிலான டயகனல் டிஸ்பிளேவை, 1080 × 2400 பிக்சல்கள் ரெசல்யூஷனுடன் கொண்டிருக்கும். இது அதன் முன்னோடிகளை விட சற்றே பெரியது, ஏனெனில் முன்னதாக வெளியான மாடல்கள் ஆனது 6.41 இன்ச் மற்றும் 1080 × 2300 பிக்சல்கள் ஸ்க்ரீன் ரெசல்யூஷனை மட்டுமே கொண்டிருந்தன.

  டிஸ்பிளே அளவைத் தவிர, இதன் பெர்பார்மன்ஸ் பிரிவும் பெரிய அளவிலான மேம்பாடுகளை பெறும். இந்த முறை, மோட்டோரோலா நிறுவனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட்டை பயன்படுத்தலாம். இது மோட்டோ ஜி ஸ்டைலஸின் முதல் பதிப்பில் பயன்படுத்தப்படும் ஸ்னாப்டிராகன் 665 ஐ விட சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும்.

  ஸ்னாப்டிராகன் 675 உடன் மிகவும் உகந்ததாக செயல்பட, மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி நேட்டிவ் ஸ்டோரேஜ் பொருத்தப்படலாம்ம். உடன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைப் பயன்படுத்துவதன் மூலம் அதை விரிவாக்கமும் செய்யலாம்.

  இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் இடம்பெறும் மற்றொரு மாற்றம் – கைரேகை சென்சார் ஆனது பின்னால் இருந்து பக்கவாட்டமாக நகரலாம்.

  கேமராக்களை பொறுத்தவரை, மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 ஸ்மார்ட்போனின் பின்புற குவாட்-கேமரா அமைப்பு இடம்பெறலாம். அதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் ஒரு ஜோடி 2 மெகாபிக்சல் கேமராக்கள் இடம்பெறலாம். அவைகள் டெப்த் சென்சார் மற்றும் மேக்ரோ கேமராவாக செயல்படலாம்.

  அறிமுகத்தைப் பொருத்தவரை எந்த தகவலும் இல்லை, ஆனால் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு தான் அறிமுகமாகும் என்பதை இதன் பெயரே தெரிவிக்கிறது. மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஆனது மோட்டோ ஜி ப்ரோ என்கிற பெயரின் கீழ் சில தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 ஸ்மார்ட்போனில் இந்த நடைமுறையை நாம் எதிர்பார்க்கலாம்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here