அய்யய்யோ, நமிதா கிணத்துல விழுந்துட்டாரே: ஒரே பரபரப்பு

0
3

ஹைலைட்ஸ்:

  • ஷூட்டிங்கில் கிணற்றில் விழுந்த நமிதா
  • நமிதா கிணற்றில் விழுந்ததால் பரபரப்பு

விஜயகாந்தின் எங்கள் அண்ணா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் . தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

கோலிவுட்டில் ஒரு பெரிய ரவுண்டு வந்த நமிதா, தன் ரசிகர்களை மச்சான்ஸ் என்று பாசமாக அழைப்பார். அவர் அப்படி மச்சான்ஸ் என்று சொல்வது மிகவும் பிரபலமானது. அவர் வீரேந்திரா என்பவரை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். என்கிற படத்தை தயாரித்து ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். பவ் பவ் தமிழ் மற்றும் மலையாளத்தில் எடுக்கப்பட்டுகிறது.

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அந்த படப்பிடிப்பால் திருவனந்தபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது படப்பிடிப்பின்போது நமிதா கால் தவறி கிணற்றில் விழுந்துவிட்டார் என்கிற தகவல் வெளியாகி தீயாக பரவியது. இதனால் தான் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நிஜத்தில் நடந்தது வேறு.

காட்டுப்பகுதிக்கு அருகே உள்ள கிணற்றையொட்டி நமிதா நடந்து வரும் காட்சி படமாக்கப்பட்டது. அப்படி நடந்து வரும்போது நமிதாவின் செல்போன் கை தவறி கிணற்றில் விழுந்துவிடும். இதையடுத்து போனை எடுக்க நமிதா கிணற்றில் குதிப்பார். இதை தான் நமிதா கால் தவறி கிணற்றில் விழுந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் தவறாக புரிந்து கொண்டனர்.

நமிதா கிணற்றில் விழுந்ததை பார்த்த மக்கள் பதட்டம் அடைந்தனர். இயக்குநர்கள் ஆர்.எல். ரவி மற்றும் மேத்யூ ஸ்காரியா ஆகியோர் கட் என்று சொல்லி, கை தட்டிய பிறகே இது படப்பிடிப்பு என்பது அங்கிருந்த மக்களுக்கு புரிந்தது என படக்குழு தெரிவித்துள்ளது.

பவ் பவ் படத்திற்கு ரெஜிமோன் இசையமைக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு வெளியான பொட்டு தான் நமிதா நடிப்பில் கடைசியாக வெளியான படம். அந்த படத்தில் பரத் ஹீரோவாக நடித்திருந்தார். நமிதா கடந்த ஆண்டு டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0 நிகழ்ச்சியின் நடுவராக இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here