அப்போ புரியல, இப்போ தான் புரியுது: மன்னிப்பு கேட்ட செல்வராகவன்

0
11

ஹைலைட்ஸ்:

  • ராம்சே பெயர் சர்ச்சை- மன்னிப்பு கேட்ட செல்வராகவன்
  • பேட்டியில் கேள்வி புரியவில்லை- செல்வராகவன்
  • யூடியூப் சேனல் பேட்டியால் சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்

இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா கசான்ட்ரா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் நடித்த படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு கடந்த 5ம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

செல்வராகவனின் பிறந்தநாள் அன்று வெளியான அந்த படம் அனைவரையும் கவர்ந்தது. ஹாரர் படத்தின் பழைய ஃபார்முலாவை பயன்படுத்தி அதை தன் ஸ்டைலில் கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார் செல்வராகவன். எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் அசந்து போனார்கள்.

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு செல்வராகவன் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் கடவுள் மறுப்பாளரான ஹீரோவுக்கு ராம்சே என்று பெயர் வைத்தது கடவுள் மறுப்பாளரான ராமசாமியை குறிப்பிட்டா என்று கேட்கப்பட்டது. அதற்கு செல்வராகவன் ஆம் என்று பதில் அளித்தார். அந்த பேட்டி வீடியோவை பார்த்தவர்கள் அது எப்படி பெரியாரை பற்றி செல்வராகவன் அப்படி பேசலாம் என்று விமர்சித்தனர்.

இதையடுத்து செல்வராகவன் மன்னிப்பு கேட்டு ட்வீட் போட்டிருக்கிறார். அந்த ட்வீட்டில் செல்வராகவன் கூறியிருப்பதாவது,
நண்பர்களே! அந்த நேர் காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும் என்றார்.

செல்வராகவனின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

என்ன பயந்துட்டியா குமாரு?, அடி ரொம்ப பலமோ?. அது எப்படி புரியாமல் ஆமாம் என்று பதில் அளித்தீர்கள். நன்றாக சமாளிக்கிறீர்கள் செல்வராகவன்.
நீங்கள் யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டியது இல்லை செல்வா. ஆம் என்று சொன்னதில் தவறு இல்லை. அனைவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. பெரியாரே உயிரோடு இருந்திருந்தாலும் உங்கள் மீது கோபப்பட்டிருக்க மாட்டார் என தெரிவித்துள்ளனர்.

ராம்சே கதாபாத்திரத்தின் பெயரால் தான் பிரச்சனையே. ஒரு கொலைகார, ரேபிஸ்ட்டுக்கு பெயரை வைத்து அசிங்கப்படுத்திவிட்டார் செல்வராகவன். அது குறித்து விளக்கம் அளிக்காமல் மழுப்புகிறார் என்று சிலர் கொந்தளிக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here