‘ஈஸ்வரன்’ பட வெளியீட்டிற்கு புதிய சிக்கல்!

0
3
சுசீந்திரன் இயக்கத்தில் , , நிதி அகர்வால், காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஈஸ்வரன். படத்தை திண்டுக்கல்லைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் படமாக்கி முடித்துள்ளது படக்குழு.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘ஈஸ்வரன்’ திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக மோஷன் போஸ்டர் ஒன்றில் சிம்பு கையில் பாம்பு பிடித்திருப்பதைப் போன்ற காட்சி இடம்பெற்று, பிரச்சினை எழுந்தது. அது கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட பாம்பாக இருந்தாலும் திரைப்படங்களில் விலங்குகளைப் பயன்படுத்த, சித்தரிக்க விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம். ஆனால் ‘ஈஸ்வரன்’ படக்குழுவினர் இதற்கான அனுமதியைப் பெறாததால், வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டர் மற்றும் டீசரை பகிர்வதை நிறுத்த விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுடிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈஸ்வரன்

ஈஸ்வரன்

இந்நிலையில் தற்போது புதிய பிரச்சனை எழுந்துள்ளது. சிலம்பரசன் நடித்த ஈஸ்வரன் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இப்படம் தமிழ்நாட்டில் தியேட்டர்களில் வெளியாகும், ஜனவரி 14ஆம் தேதியன்றே வெளிநாடுகளில் ஓடிடியில் வெளியீடு என்ற அறிவிப்பு தியேட்டர்காரர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வெளிநாட்டில் ஓடிடி வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டது. இப்படியான ஒரு புதிய முறைக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். அதனால், படத்தைத் திரையிட ஒப்பந்தம் போட்டுள்ள தியேட்டர்காரர்கள் படத் தயாரிப்பாளரிடம் படத்தைத் திரையிட விருப்பமில்லை என சொல்லிவிடுங்கள், அதனால் வரும் பிரச்சினைகளை சங்கம் பார்த்துக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆடியோ வெளியிட்டுள்ள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம்‘ஒரே நாள் திரையரங்கு மற்றும் ஒடிடி வெளியாவதை அனுமதித்தால் அனைத்து திரைப்படங்களும் இதுபோல முடிவெடுக்க ஆரம்பித்து விடுவார்கள். எனவே ஈஸ்வரன் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here