தமிழக முதல்வருக்கு புதிய பட்டம்: இனி “Paul Harris Fellow” என்று அன்போடு அழைக்கப்படுவார்

0
2
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு “Paul Harris Fellow” என்ற வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் “The Rotary Foundation of Rotary International” எனும் அமைப்பு குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களுக்கு “Paul Harris Fellow” என்ற பட்டத்தை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தமிழக முதல்வரின் சேவையை பாராட்டி அந்த அமைப்பானது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு “Paul Harris Fellow” என்ற பட்டத்தை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது. இந்த தகவலை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

புதிய பட்டம்

புதிய பட்டம்

முன்னதாக, சினிமா, விளையாட்டு, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்து வரும் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி – ஆராய்ச்சி நிறுவனம் தமிழக முதல்வரான எடப்பாடி பழனிசாமிக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here