வரலாற்றில் இன்று: ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பை கனவைத் தகர்த்த யுவராஜ் சிங்!

0
10

2011ஆம் ஆண்டு, மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை காலிறுதிச் சுற்றில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணியின் உலகக் கோப்பை கனவைத் தகர்த்தார் இதன்மூலம் உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து 6ஆவது முறையாக ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடையும் நிலையிலிருந்து தப்பித்தது.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 260 ரன்கள் குவித்துஅசத்தியது. இலக்கைத் துரத்திய இந்திய அணியில் துவக்க வீரர்களாக விரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் களமிறங்கினர். முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 44 ரன்களாக இருந்தது. சேவாக் (15) 9ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அடுத்துக் களமிறங்கிய கவுதம் கம்பீர், சச்சினுடன் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதம் கடந்து அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து இந்திய அணியும் சில முக்கிய விக்கெட்களை இழந்தது.

யுவராஜ், ரெய்னா பார்ட்னர்ஷிப்:

இதனால், இந்திய அணி தோல்வி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அந்த நெருக்கடியான நேரத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்த சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் இருவர் இணைந்து 74 ரன்கள் சேர்த்து, 14 பந்துகளை மிச்சம் வைத்து இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள்.

யுவராஜின் பங்களிப்பு:

யுவராஜ் சிங் 65 பந்துகளில் 57 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இறுதியில் இந்திய அணி கோப்பை வென்றது. இத்தொடரில் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெட்கள் வீழ்த்திய யுவராஜ் சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here